Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோயில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

KANIMOZHI Updated:
வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோயில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? Representative Image.

வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறையினர், தீயணைப்பு, மாநகராட்சி, மின்சாரம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு  ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் லட்சக்கணக்கான மக்கள்  கோவில்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தரப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,பார்த்தசாரதி கோவிலின் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது. நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள்.சுழற்சி முறையில் மூன்று வேலையும் 120 தூய்மை பணியாளர்கள்  சுகாதாரம் பேணி காக்க பணியாற்றுவார்கள் என்றார்.

மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தை சுற்றி சுழற்சி முறையில் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளி நடைமுறையில் இருப்பது தான். மக்கள் தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

கோவில்களில் தீண்டாமை நிச்சயம் திராவிடம் மாடல் ஆட்சியில் இருக்காது.  தீண்டாமை என்பது இந்த ஆட்சியில் தீண்டாமலேயே போய்விடும் என்றார்.எந்த சூழ்நிலையிலும் எந்த அளவுக்குச் சென்றும் வன்முறைகளை அடக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என குறிப்பிட்டார். 

வைகுண்ட ஏகாதேசி உற்சவம் தினம் முன்னிட்டு வரும் ஜனவரி 2ஆம் தேதி விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதன்படி வரும் ஜனவரி 2 அதிகாலை 2.30  மணி முதல் 4 மணி வரை பரமபத வாசல் சேவை.பரமபத வாசல் அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும்.

பரமபத வாசல் தரிசன கட்டண சீட்டு நபர் ஒருவருக்கு 500 ரூ. வரும் டிசம்பர் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்டண சீட்டு வழங்கப்படும்.ஆதார் அட்டை நகல் கொடுத்து கட்டண சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.  முதலில் வரும் சுமார் 750 நபர்கள் முன்னுரிமை அடிப்படையில் பரமபத வாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

 திருக்கோயில் கிழக்கு கோபுர வாசல் வழியாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொது தரிசனம் செய்ய அனுமதி. திருக்கோயில் மேற்கு கோபுர வாசல் வழியாக 100 கட்டண சீட்டு பெற்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். 200 ரூபாய் கட்டண தரிசனமாக இருந்ததை நூறாக குறைத்து வழங்கப்பட உள்ளது.

முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கிழக்கு கோபுர வாசல் அதாவது முன் கோபுர வாசல் வழியாக காலை 8:00 மணி முதல் காலை 10 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையிலும் தரிசனம் செய்ய அனுமதி.

பக்தர்களின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு. கோவிலில் நான்கு மாட வீதிகளிலும் ஜனவரி ஒன்று மற்றும் இரண்டாம் தேதி வானங்கள் நிறுத்த அனுமதி இல்லை.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்