Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? | How to Book Vaikunta Ekadasi Tickets Online in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? | How to Book Vaikunta Ekadasi Tickets Online in TamilRepresentative Image.

வருடா வருடம் மார்கழி மாதத்தில் மொத்தம் 20 நாட்கள் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். அனைத்து கோயில்களைக் காட்டிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஏகாதசி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்தவகையில், வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மொத்தம் 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சொர்க வாசல் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? | How to Book Vaikunta Ekadasi Tickets Online in TamilRepresentative Image

ஆன்லைனில் திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் புக் செய்வது எப்படி?

➤ திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு முதலில் செல்லவும். இதனை கிளிக் செய்தால், அந்த இணையதளம் திறக்கும்.  https://tirupatibalaji.ap.gov.in/

➤ ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருந்தால் லாகின் செய்துக் கொள்ளுங்கள். புதிய பயனாளியாக இருந்தால் உங்க மொபைல் நம்பரை உள்ளிட்ட தரவுகளை ரிஜிஸ்டர் செய்து, அதன் பிறகு லாகின் (login) செய்ய வேண்டும். 

➤ அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் இடத்தை பொறுத்து அதிகபட்சம் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கை மாறும். 

➤ உதாரணமாக, திருப்பதிக்குக் குறைந்தபட்சம் இரண்டு மற்றும் அதிகபட்சம் நான்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் குறிப்பிட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ப அதில் தேர்வு செய்யவும்.

➤ அதில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகத் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் திருமலையில் கூடுதல் ரூம்களை பெற வேண்டும்.

➤ பக்தர்கள் தாங்கள் தங்குமிடத்தையும் கூட ஆன்லைன் மூலமே புக் செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு நாள் முன்கூட்டியோ அல்லது அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பு தங்குமிடத்தை புக் செய்து கொள்ள முடியும்.

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? | How to Book Vaikunta Ekadasi Tickets Online in TamilRepresentative Image

➤ அடுத்த பக்கத்தில் எந்த தேதியில் தரிசனத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுக்கவும். அது பச்சை நிறத்தில் இருந்தால், டிக்கெட்கள் இருக்கிறது என்று ஆர்த்தம். மஞ்சள் நிறத்தில் இருந்தால் வேகமாக நிரம்புகிறது என அர்த்தம்.

➤ நீல நிறத்தில் இருந்தால் அந்த நாளுக்கான டிக்கெட் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை என அர்த்தம். சிகப்பு நிறத்தில் இருந்தால் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

➤ அடுத்த பக்கத்தில் ரூம்கள் விலையுடன் வரும். அதில் எத்தனை பேர் செல்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்குப் பிடித்த ரூம்களை செலக்ட் செய்யுங்கள்.

➤ அடுத்துச் சிறப்புத் தரிசனத்திற்கான நேர ஸ்லாட்டைத் தேர்வு செய்யவும்.. தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு விருப்பமான நேர ஸ்லாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

➤ அடுத்த பக்கத்தில் மொத்தம் எத்தனை பேர் செல்கிறீர்களோ அந்த எண்ணிக்கையைப் பதிவிடவும். ஒவ்வொரு பக்தரின் பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று  மற்றும் அடையாள அட்டை எண், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்