Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வைகாசி விசாகம் 2023: தேதி, நேரம், வழிபாடு மற்றும் முக்கிய விவரங்கள்..! | Vaikasi Visakam 2023 Date and Time

Gowthami Subramani Updated:
வைகாசி விசாகம் 2023: தேதி, நேரம், வழிபாடு மற்றும் முக்கிய விவரங்கள்..! | Vaikasi Visakam 2023 Date and TimeRepresentative Image.

வைகாசி விசாகம் ஆனது முருகப் பெருமானை வேண்டி வழிபடும் சிறப்பான நாளாகும். தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதமாக விளங்கும் வைகாசி மாதத்தில் இந்த சிறப்பு தினம் வருகிறது. இத்தகைய அருமையான தினத்தில் முருகப் பெருமானை வழிபடும் போது கல்வி செல்வம் இரண்டும் மேம்படும். இந்நாளின் மற்றொரு சிறப்பாக, நீண்ட ஆயுள் வேண்டி எம பூஜை செய்வார்கள். இந்த சிறப்பான வைகாசி விசாகம் குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

வைகாசி விசாகம் என்றால் என்ன?

வைகாசி மாதமானது இந்தியாவில் வசந்த காலமாக அமைகிறது. இந்த வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில், கோவிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகிறது. மேலும், இந்த விசாக நட்சத்திரமானது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் என்று கூறலாம். இந்த விசாக நட்சத்திரமானது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் எனவும் கூறலாம்.

வைகாசி விசாகம் 2023 தேதி மற்றும் நேரம்

ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த வைகாசி விசாகம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் வைகாசி விகாசம் ஆனது, வரும் ஜூன் 2 ஆம் நாள் காலை 05.55 மணிக்குத் தொடங்கி, ஜூன் 3 ஆம் நாள் காலை 05.54 வரை இந்த விசாகம் நட்சத்திரம் உள்ளது.

வைகாசி விசாகத்தின் சிறப்பு கடவுள்

வைகாசி விசாகமானது, முருக வழிபாடு கொண்ட சிறப்பு தினமாகும். அதாவது, மயிலைத் தன்னுடைய வாகனமாக வைத்திருப்பவன் என்பதையே விசாகன் என்று கூறுகிறோம். இந்நன்னாளில் வேலனுடன் மயிலையும் வழிபடுவது சிறப்பாகும். இந்த சிறப்பு தினத்திலேயே முருகன் 6 முனிவர்களின் சாபங்களை நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பண்டிகையானது தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் இந்த வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்