Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vaikasi Visakam Valipadu in Tamil: வைகாசி விசாக தினத்தில் முருகனை வீட்டில் இப்படி தான் வழிபட வேண்டுமா!

Manoj Krishnamoorthi June 11, 2022 & 16:30 [IST]
Vaikasi Visakam Valipadu in Tamil: வைகாசி விசாக தினத்தில் முருகனை வீட்டில் இப்படி தான் வழிபட வேண்டுமா!Representative Image.

எம்பெருமான் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு உருவமாக அவதரித்த ஆறுமுகன் பிறந்த விசாக நட்சத்திரம் என்றாலே சிறப்புதான். அறிவு கூர்மைக்கு உரிதான நட்சத்திரம் என்றும் சொல்லலாம். இந்த நாள் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகும். 

முருகனை வழிபாடு செய்யும் நாட்களில் இந்த  வைகாசி விசாகத் திருநாளும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.முருகனை இந்த விசாகத் திருநாளன்று தரிசித்தால் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி வெற்றி பெற முருகன் வழி செய்வார். வைகாசி மாதம் 29 ஆம் நாள் (ஜூன் 12, 2022 ஞாயிற்றுக்கிழமை) அன்று வரும் இந்த வருட வைகாசி வாசகத் திருநாளில் முருகனை வீட்டில் வழிபாடு செய்வது எப்படி? என்பதை அறிய இவ்வாசகத்தைத் தொடர்ந்து வாசியுங்கள். 

வைகாசி விசாக தினத்தன்று வீட்டில் முருகனை வணங்குவது எப்படி? (Vaikasi Visakam Valipadu in Tamil)

வாழ்வில் வெற்றி பெற வைகாசி விசாகத் தினத்தன்று முருகனின் திருமுகத்தைக் காண்பது முன்னேற வழி செய்யும். இந்த தினத்தில் அனைத்து முருகன் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடக்கும்.

இந்த தினத்தில் முருகன் ஆலயம் செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலும் முருகனை வழிபாடு செய்யலாம், அது எப்படி என்பதைக் கீழ்க்காணவும். 

வைகாசி தினத்தன்று வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் இருக்கும் முருகன் சிலை அல்லது படத்துடன் விநாயகர் படம், அல்லது சிவ பெருமான் குடும்ப படத்துடன் சேர்த்து வையுங்கள். 

முதலில் ஒரு ஐந்து முக விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன்பிறகு புதிய பூக்களை இறைவனுக்கு படைக்க வேண்டும்.

முருகனுக்கு ஐந்து விதமான கனிகளையும்,  தேங்காய் மற்றும் வெற்றிலை பாக்குடன் ஒரு எலுமிச்சை கனி வைக்க வேண்டும்.

இதை காலையில் எழுந்தவுடன் முதலில் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி வழக்கமான வேலைகளைச் செய்யலாம், விரதத்தை முடிக்கும் முன் முருகப் பெருமானுக்கு படைத்த பழத்தில் கொஞ்சம் பிரசாதமாக உட்கொண்டு விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.  

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்... 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்