Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு; கோவிந்தா... கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்! 

KANIMOZHI Updated:
வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு; கோவிந்தா... கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்! Representative Image.

கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது, திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ உலகளந்தபெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு; காலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஸ்ரீஉலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இது பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற சிறப்பு வாய்ந்தது.

நாலாயிர திவ்யபிரபந்தம் ஆழ்வார்களால் முதன் முதலில் பாடப்பெற்றது என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு. இதனால் நாலாயிரபிரபந்த அவதார தலம் என்றும் அழைப் பார்கள். பெருமாளை தமிழ் பாசுரங்களில் பாடியவர்களும், ஆழ்வார்களில் முதன் முதல் தோன்றியவர்களுமான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை நேரில் தரிசித்து பாசுரங்கள் பாடி மகிழ்ந்தனர்.

இதனை நடுநாட்டு திருப்பதி என்றும் அழைப்பார்கள். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 5.50 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது அப்போது பக்தர்கள்  'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிட்டு  தரிசித்தனர், பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று  சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட திருக்கோவிலூர் போlலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்