Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple

Gowthami Subramani Updated:
நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple Representative Image.

திருக்காட்டுப்பள்ளி உள்ள அக்னீஸ்வரர் தீயாடிப்பர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த கோவில் ஆனது, திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் போன்றோரால் பாடல் பெற்ற சிவ ஆலயமாகும். இந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் வரலாறு, தலத்தின் சிறப்பு, செல்லும் வழி உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.

நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple Representative Image

கோவில் வரலாறு

அக்கினி என அழைக்கப்படும் தலமான இத்தலம் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. இத்தலமானது, சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்திருக்கும் ஒன்பதாவது சிவ தலமாக இத்தலம் அமைகிறது. இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த திருக்காட்டுப்பள்ளி, மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்ற பெயரால் புராணக் காலத்தில் குறிப்பிடப்படுகிறது.

நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple Representative Image

தல சிறப்பு

தஞ்சை மாவட்டத்தில் அதிலும் காவிரி கரையோர பகுதிகளில் ஏராளமான சிவாலயங்கள் காணப்படுகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்று திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.

இந்த கோவிலின் சிறப்பாக விளங்கும் அக்னி தீர்த்தத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், மாசி மகம், பங்குனி உத்திராடம், வைகாசி பௌர்ணமி உள்ளிட்ட நாள்களில் நீராடி அக்னீஸ்வரரை வழிபட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple Representative Image

நோய்களைத் தீர்க்க

இந்த கோவிலின் சிறப்பம்சமாக, அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் பாவங்களும், வயிற்று நோயும் தீர்ந்து விடும். இதற்கு ஒரு புராணக் கதையே உள்ளது. இதில் அக்னி பகவான், இறைவனின் இந்த திருத்தலத்துக்கு வருகை புரிந்து அக்னி தேவனால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் வயிறு சம்பந்தமான நோய்களையும், முன் செய்த பாவங்களையும் நீக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple Representative Image

கோவிலுக்குச் செல்லும் வழி

திருக்கட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழிகளைப் பற்றி இதில் காண்போம்.

இதில் சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள், தஞ்சைக்கு ரயிலில் வந்து, பிறகு தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும். பின், அங்கிருந்து பேருந்து மூலம் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று அக்னீஸ்வரர் கோவிலுக்குச் சென்றடையலாம்.

ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும், இத்திருத்தலத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்