Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 Arudra Darshan Date and Time | 2023 ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதி

UDHAYA KUMAR Updated:
2023 Arudra Darshan Date and Time | 2023 ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதிRepresentative Image.

When Arudra Darshan | arudra darshan timings 2023 | arudra darshan 2023 date | uthirakosamangai arudra darisanam 2023 | chidambaram arudra darisanam 2023 | arudra darisanam 2023 in tamil | arudra darshan meaning in tamil | Thiruvathirai dharisam in tamil

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவ பெருமானுக்கு பிரம்மாண்ட பூஜை சிறப்பாக செய்யப்படும். அதிலும் குறிப்பாக, மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு உண்டு. அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடக்கும். காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமையும்.  திருவாதிரை தின ஆருத்ரா தரிசனத்தில் குடும்ப பெண்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவர். இந்நாளில் குடும்ப பெண்கள் இருக்கும் விரதம் அவர்களின் குடும்பத்துக்கான நலன், பொருளாதார முன்னேற்றம், ஆரோக்யம் என அனைத்தும் கிடைக்க வாய்ப்பாக அமையும். 

மேலும் படிக்க | திருவாதிரை விரதம் (மாங்கல்ய நோன்பு) இருப்பது எப்படி? தாலி கயிறு மாற்றும் முறை

கடந்த 2022-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனம் இல்லை. இதனால் பலருக்கும் அந்த ஆண்டு சிறப்பாக இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். மேலும் அடுத்த ஆண்டு சிறப்பாக அமைய கடவுளை வேண்டி சிவபெருமான், பெருமாள் தலங்களில் பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டிருப்பார்கள்.  2023-ம் ஆண்டு ஜனவரி 5-ல் தான் திருவாதிரை நட்சத்திரம் வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 3 நாட்கள் திருவாதிரை நட்சத்திரம் இருக்கிறது.

Thiruvathirai 2023 Date | திருவாதிரை 2023 தேதி

ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை ஜனவரி-7, 2023 (மார்கழி 22) | arudra darshan 2023 Friday January 7 (Margazi 22)

ஆருத்ரா தரிசன நேரம்: Thiruvathirai 2023 Time 

திருவாதிரை நட்சத்திரம் ஆரம்பம் – ஜனவரி-5, 2023 (மார்கழி 20) அன்று இரவு 9:26  | Thiruvathirai natchatiram start - January 5, 2023 (Margazi 20) at 9.26 PM

திருவாதிரை நட்சத்திரம் முடிவு – ஜனவரி-7, 2023 (மார்கழி 22) அன்று இரவு 11:28 PM | Thiruvathirai natchatiram end - January 7, 2023 (Margazi 22) at 11:28 PM

2023 Arudra Darshan Date and Time | 2023 ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதிRepresentative Image

திருவாதிரை நோன்பு

ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாக நம்பப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என கொண்டாடப்படுகிரது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலம்.  ஒவ்வொரு மார்கழி மாதமும் திருவாதிரை நட்சத்திர தினத்தில் தேவர்கள் அனைவரும் இறைவனுக்கு முக்கியமாக சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக தொன்நம்பிக்கை. அந்த சமயத்தில் சிவபெருமான் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. அந்தவகையில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்