Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வராஹி அம்மனை எந்த தினத்தில் வழிபட்டால், என்னென்ன பலன்களைப் பெறலாம்..? | Varahi Amman Worship Days

Gowthami Subramani Updated:
வராஹி அம்மனை எந்த தினத்தில் வழிபட்டால், என்னென்ன பலன்களைப் பெறலாம்..? | Varahi Amman Worship DaysRepresentative Image.

சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக விளங்குபவர் வராஹி அம்மன். சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக விளங்குபவர் வராஹி அம்மன். பொதுவாக, பஞ்சங்களைப் போக்கும் அவதாரமாகப் பிறந்தவர் வராஹி அம்மன் என்றே கூறுவர். எல்லா விதமான அருளையும் சிறப்பாக வழங்கும் அருள்மிகு வராகி அம்மனுக்கு விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதில், எந்தெந்த தினங்களில் வராஹி அம்மனை வழிபடுவதால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

வராஹி அம்மனை எந்த தினத்தில் வழிபட்டால், என்னென்ன பலன்களைப் பெறலாம்..? | Varahi Amman Worship DaysRepresentative Image

வராகி அம்மன் விரதம்

வராகி அம்மனை சரியான முறையில் விரதம் இருந்து வழிபட்டால், பக்தர்களுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில், ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பதால், தனிப்பட்ட பலன்களைப் பெற முடியும். இதில், விரதங்களில் விவரங்கள் குறித்துத் தெளிவாகக் காணலாம்.

வராஹி அம்மனை எந்த தினத்தில் வழிபட்டால், என்னென்ன பலன்களைப் பெறலாம்..? | Varahi Amman Worship DaysRepresentative Image

வராகி அம்மன் விரத முறை

வராஹி அம்மனுக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள், அம்மனைக் கும்பிட்டு விரதத்தைத் தொடங்கலாம். விரதம் இருக்கும் நாள்களில் கேசரி, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பூரணம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் வராஹி அம்மனுக்கு நைவேத்தியம் செய்யலாம்.

மேலும் வெள்ளரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் நைவேத்தியமாக செய்து வழிபடலாம்.

வராஹி அம்மனுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் ஆகும். இந்த விரதம் இருக்கும் நாள்களில் பச்சை நிற துண்டின் மீது அமர்ந்து, இலுப்பை எண்ணெயை தீபமாக ஏற்றி வழிபடலாம்.

இவ்வாறு தீபம் ஏற்றும் போது கிழக்கு நோக்கி ஏற்றினால், வடக்குப் புறம் அமர்ந்து கொள்ள வேண்டும்.

இதில், வளர்பிறை பஞ்சமி திதி திருநாளன்று வராஹி அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால் தீய சக்திகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

வராஹி அம்மனை எந்த தினத்தில் வழிபட்டால், என்னென்ன பலன்களைப் பெறலாம்..? | Varahi Amman Worship DaysRepresentative Image

வராகி அம்மன் விரதம் இருக்கும் நாள்கள் & பலன்கள்

எந்தெந்த தினங்களில் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்தால், என்னென்ன பலன்கள் பெறலாம்.

வெள்ளிக்கிழமை அன்று வராஹி அம்மனை வழிபடுவதன் மூலம், மாங்கல்ய பாக்கியமும், வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

திங்கள்கிழமை நன்னாளில் விரதம் இருந்து வந்தால் மனநலம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை தினங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு, நிலம், வழக்கு போன்ற சிக்கல்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

புதன்கிழமைகளில் விரதம் இருப்பவர்களுக்கு கடன் சிக்கல்கள் நீங்கி விடும்.

வியாழக்கிழமை தினம் அன்று விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், கல்வியில் முன்னேற்றம், குழந்தை பாக்கியம் போன்றவை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், எந்த காரியத்திலும் வெற்றி பெற வராஹி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நினைக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்