Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

போச்சே.. போச்சே... தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் விவசாயிகள்! 

KANIMOZHI Updated:
போச்சே.. போச்சே... தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் விவசாயிகள்! Representative Image.

செங்கம் சுற்று வட்டார பகுதியில் பெய்த  தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்  நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் அதன் சுற்று வட்டார பகுதிகளான செங்கம் குப்பநத்தம் தித்தாண்டப்பட்டு சே நாச்சிபட்டு முத்தனூர் கொட்டைகுளம் மற்றும் பல கிராமங்களில் விவசாய நிலங்களில்  பயிரிடப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில்  சம்பா நெல் நடவு செய்து, தற்போது அறுவடை செய்ய காத்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக பெய்த தொடர் மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


மேலும் கடன் பட்டு முதலீடு செய்த நெற்பயர்கள் நீரில் மூழ்கி  வீணாகிப் போனதை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் நலன் கருதி அரசு தங்களுக்கு மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும்  என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்