Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுந்தர் பிச்சையே நேரில் அழைத்து பாராட்டிய இளம் தமிழர்.. யார் இந்த அக்ரி முரளி?

Sekar Updated:
சுந்தர் பிச்சையே நேரில் அழைத்து பாராட்டிய இளம் தமிழர்.. யார் இந்த அக்ரி முரளி?Representative Image.

தமிழக விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்து கற்றுத் தர மொபைல் செயலியை இயக்கி வரும் தமிழக இளைஞரை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்வார் பகுதியைச் சேர்ந்த 37 வயதான முரளி பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்துள்ளார். இவரது தந்தை செல்வராஜ் தானிய வியாபாரியாக இருந்து வந்துள்ளார்.

தானியம் விற்கும் தந்தையும், தன் தந்தைக்கு தானியம் கொடுக்கும் விவசாயிகளும் அதிக லாபம் கிடைக்காமல் தவிப்பதைக் கண்ட முரளி, விவசாயிகளுக்கு உதவவும், பகிர்ந்து கொள்ளவும் பத்து ஆண்டுகளுக்கு முன் "விவசாயம் இன் தமிழ்’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

மேலும் இதில், விவசாயிகளுக்கான தகவல்களை புள்ளி விவரங்களுடன் தொடர்ந்து பதிவேற்றம் செய்வதோடு, விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களையும் வழங்கி வருகிறார்.

இதற்காக, 2017ல், தமிழக முதல்வரின் கணினித் தமிழ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு, மத்திய அரசுடன் இணைந்து, கூகுள் ஆப் ஸ்கேல் அகாடமி'யை துவங்கியது.

இதன் மூலம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 100 மென்பொருள் தொழில்முனைவோரை, அவர்கள் உருவாக்கிய மொபைல் ஆப்ஸ் அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மற்றும் சான்றிதழ் அளித்து, அவர்கள் உலககளவில் சென்றடையும் நிலையை உருவாக்கியது. இதில் பங்கேற்றவர்களில் முரளியும் ஒருவர்.

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி முரளிக்கு கூகுளில் இருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளது. அதை ஏற்று கடந்த 18 ஆம் தேதி அவர் டில்லி சென்றார். அங்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓபராய் ஹோட்டலில் அவரை சந்தித்து பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய முரளி, "நான் அறைக்குள் நுழையும் முன், எனது தமிழை யாரையாவது மொழி பெயர்க்கக் கேட்டேன். ஆனால் அவர்கள், தமிழிலேயே பேசலாம் என்றார்கள். நான் குழப்பத்துடன் உள்ளே நுழைந்த போதுதான், சுந்தர் பிச்சை அங்கே இருந்தார். இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. 

நான் கேட்டதும், தமிழில் பேசலாமா? என்று என்னிடம் அவரே பேச ஆரம்பித்தார். விவசாயிகளுக்காக மொபைல் ஆப் தயாரிப்பதற்கான காரணத்தையும் சூழலையும் கேட்டார். விவசாயத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, அதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் பலன்களை வழங்கும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டது என்று அவருக்கு விளக்கினேன்.

இந்த நல்ல செயலை பாராட்டிய அவர், மற்ற இந்திய மொழிகளிலும் எனது செயலியை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது." என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்