Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

42 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறை; கொண்டாட்டத்தில் ஈரோடு விவசாயிகள்!  

KANIMOZHI Updated:
42 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறை; கொண்டாட்டத்தில் ஈரோடு விவசாயிகள்!  Representative Image.

47 ஆண்டுகால வரலாற்றிலேயே வரட்டுபள்ளம் அணையில் இருந்து தொடர்ந்து 74 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டும்பள்ளம் அணை,  அந்தியூர் கிராமப் பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்  இந்த அணை கடந்த 1980 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ‌

அணை அதன் முழு கொள்ளளவு எட்டியவுடன் அணைக்கு வரும்  நீரானது தானாகவே கழுங்குகள் வழியாக உபரிநீராக வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன,  மேலும் மூன்று கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் இந்த அணையில் மீனவர்களும்  மீன் குஞ்சுகளை வளர்த்து அதனை பிடித்து வாழ்வாதாரம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது, இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி அதன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உபரி நீர் வெளியேறத் தொடங்கியது,

தொடர்ந்து வரட்டு பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததன் காரணமாக அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேறி வந்தது இந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததன் காரணமாக அணைக்கு வரும் நீரில் வரத்து குறைந்து கொண்டே வந்த நிலையில் நேற்று இரவு முதல் அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்றது.

இதன் காரணமாக அணையில் இருந்து வெளியேறும் உபநீரும் முற்றிலும் நின்றது, அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 74 நாட்களாக தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேறியுள்ளது, அணை கட்டி முடிக்கப்பட்டு 42 ஆண்டு கால வரலாற்றில் இவ்வளவு அதிக நாட்கள் உபரிநீர் வெளியேறியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்