Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Farmer Subsidy in Tamilnadu: விவசாயிகளே..! உங்களுக்கான மானியத் தொகை ரெடி..! விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இங்கே….!

Gowthami Subramani July 08, 2022 & 12:00 [IST]
Farmer Subsidy in Tamilnadu: விவசாயிகளே..! உங்களுக்கான மானியத் தொகை ரெடி..! விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இங்கே….!Representative Image.

Farmer Subsidy in Tamilnadu: விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தோட்டக்கலைத் துறை மூலம், மானியம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதன் படி, நுண்ணுயிர் பாசனத் திட்டத்திற்கான மானியத் தொகை ரூ.25,000 வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகையை விவசாயிகள் எவ்வாறு பெறலாம், அதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

தோட்டக்கலைத் துறை

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் அவர்கள் செய்யக்கூடிய நுண்ணுயிர் பாசனத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு விருது நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த மானியத் தொகை பெறுவதற்கான அழைப்பை விடுத்துள்ளார். வேளாண் துறையில் மிக முக்கியமான ஒன்றாக நீர் உள்ளது. ஆனால், தொழிற்சாலைகளும், கட்டடங்களும் பெருகி வரும் இந்த சூழலில் இயற்கையின் அடையாளம் அனைத்தும் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்

வேளாண் உற்பத்தியில் மிக முக்கியமான தேவைகளாக இருப்பது, நிலம், நீர், மற்றும் அதற்கான சில இடு பொருள்கள் ஆகும். அந்த வகையில், பயிர் சாகுபடிக்கு நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நிலத்தடி நீரைப் பெறுவது என்பது காலப்போக்கில் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து வருகிறது. இந்த மாதிரியான கால சூழலில் நாம் கட்டாயம் தண்ணீரை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் நாம் தண்ணீரை சிக்கனம் செய்யக்கூடிய வழிகளைக் கண்டறிவது முதல், விவசாயத்தில் அதிக பரப்பில் சாகுபடி செய்யும் போது தேவைப்படும் நீரின் அளவை சிக்கனம் செய்வது வரை அனைத்தையும் தெரிந்து கொள்வது அவசியம்.

தோட்டக்கலைத் துறையின் செயல்பாடு

பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டம், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுகிறது. இது தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

மானியத் தொகை

இந்த 2022-23 ஆம் நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் அடிப்படையில், சொட்டு நீர் மற்று தெளிப்பு நீர் பாசனம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட பரப்பு 1200 ஹெக்டேர் ஆகும். இவ்வாறு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. அதன் படி, துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ், புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளை அமைப்பதற்கு ரூ.25,000 மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.

அது மட்டுமல்லாமல், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய் அமைப்பதற்கு ரூ.10,000 மானியமும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்காக ரூ.40,000 மானியமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் மோட்டார் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியத் தொகை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னுரிமை

இந்த திட்டத்தில், சிறு / குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியத் தொகை பெறும் முறை

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பக்கூடிய விவசாயிகள், கீழ்க்கண்டவற்றை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிடம் அளித்து மானியத் தொகை பெற முடியும்.

விவசாயிகள் அளிக்க வேண்டிய ஆவணங்கள்

புகைப்படம் (Passport Size)

குடும்ப அட்டை நகல்

சிறு, குறு விவசாயி சான்று

ஆதார் அட்டை நகல்

கணினி சிட்டா

நிலத்தின் வரைபடம்

மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை

மேலே கூறப்பட்ட ஆவணங்களுடன் விவசாயிகள் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலையின் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம். இது குறித்த அறிவிப்பை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாதரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்