Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு..! 25% மானியம் வழங்க அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

Gowthami Subramani September 02, 2022 & 16:30 [IST]
விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு..! 25% மானியம் வழங்க அரசு வெளியிட்ட அறிவிப்பு…!Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாயத்தையும், விவசாயிகளின் நலனிற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ், விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்காகவும், ஆண்டு தோறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கான மானியம்

இவ்வாறு இந்த ஆண்டும், விவசாயிகளுக்கு 25% மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது, தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவைகளுக்கு 25% மானியத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன் படி, இதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசு வழங்கும் மானியத் தொகை

இவ்வாறு வழங்க உள்ள உபகரணங்களின் மொத்த விலை 42 லட்சம் ஆகும். இதில் அரசு மானியத் தொகையாக 10.5 லட்சம் தர உள்ளது. இதில் பயனாளிகளின் பங்குத் தொகை 31.5 லட்சம் ஆகும். இவ்வாறு 25% மானியம் பெறுவதினால், மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மேலும், இந்த திட்டத்தில், பால் பண்ணை உரிமையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்களின் சுய உதவி குழுவினர் போன்றோர் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பான திட்டம்

இவ்வாறு தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உல்ளனர். மேலும், இந்த திட்டம் தொடர்பாக தகுதியான நபர்கள், கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Government Subsidy Schemes for Farmers | Government Subsidies for Farmers in India | Input Subsidy for Farmers | Agriculture Subsidy Online Form | Types of Agricultural Subsidies UPSC | Farm Subsidies UPSC | Agricultural Subsidies in India 2022 | Agriculture Subsidy Tamilnadu | Agriculture Subsidy Scheme in Tamilnadu | Tamil nadu Agriculture Department Website | Fencing Subsidy in Tamilnadu | Tractor Subsidy Scheme in Tamilnadu in Tamil | Tamil nadu Government Subsidy Schemes


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்