Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

விவசாயிகளே..! ரூ. 2 லட்சம் மானியம் பெறுவதற்கான வாய்ப்பு..!

Gowthami Subramani August 05, 2022 & 09:25 [IST]
விவசாயிகளே..! ரூ. 2 லட்சம் மானியம் பெறுவதற்கான வாய்ப்பு..!Representative Image.

விவசாயத்திற்கும் விவசாய மக்களுக்கும் உதவும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அதன் படி, விவசாயம் செய்யப்படுவதற்கு மானியங்கள் வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறது. இந்த நிலையில், பொள்ளாட்சி பகுதியின் ஆனைமலை பகுதியில், பந்தல் சாகுபடிக்கு மானியம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பைப் பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

பந்தல் சாகுபடி

விவசாயம் செய்வதில் உள்ள பல்வேறு விதமான செயல்களுக்கு அரசு மானியம் வழங்கி உதவி செய்து கொண்டு வருகிறது. அந்த வகையிலேயே கோயம்புத்தூர் மாவட்டத்தின் உள்ள பொள்ளாட்சி பகுதியில், காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு உதவும் நோக்கத்தில், மானியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் ஆண்டுதோறும் 490 ஏக்கர் பரப்பளவில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதிக அளவிலான செலவு

விவசாயிகள் பந்தல் சாகுபடி செய்வதற்கு ஏராளமான செலவு ஆவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், விவசாயிகள் கற்கள் நட்டி, கம்பிகள் மற்றும் மூங்கில் குச்சிகள் கொண்டு பந்தல் சாகுபடி செய்கின்றனர். இதற்கு உதவும் வகையிலேயே அரசு இந்த மானியத்தை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இந்த மானியம் குறித்த விவரங்களையும், எப்படி பெறுவது உள்ளிட்ட விவரங்களையும் பற்றி இதில் காண்போம்.

மானியத்தொகை

பந்தல் சாகுபடிக்கு மானியத் தொகை வழங்குவது குறித்து, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜமுனா தேவி அவர்கள் கூறியதாவது:

விவசாயிகள் மூங்கில் பயன்படுத்தி பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்யும் போது, ஒரு ஹெக்டேர் என்ற கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இது போல, கருங்கற்கள், கம்பிகள் பயன்படுத்தி பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு 2 லட்சம் என்ற கணக்கில் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், இதில் இரண்டு பேருக்கு வழங்குவதற்கான இலக்கு பெறப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து திட்டங்களில் பயன்பெறலாம் என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்