Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளே…! ரூ.8000 ஊக்கத்தொகை உங்களுக்கு ரெடி… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Gowthami Subramani [IST]
விவசாயிகளே…! ரூ.8000 ஊக்கத்தொகை உங்களுக்கு ரெடி… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புRepresentative Image.

Farmers Incentives in Tamil: விவசாயிகளுக்கு காய்கள், பயிர்கள் போன்றவற்றைச் சாகுபடி செய்வதற்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, விவசாயிகளுக்கு 8000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை குறித்த தகவலைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.

விவசாயத்தினை மேம்படுத்த

விவசாயத்தையும், விவசாயத்துறைகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி உதவி வருகிறது. அதாவது, பயிர்கள், காய்கள் சாகுபடிக்கான மானியம் வழங்குதல் ஊக்கத்தொகை மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு செயல்களை நடைமுறைப்படுத்தி விவசாயத்தினையும், விவசாயிகளையும் ஊக்குவித்து வருகிறது. அவ்வாறே, தற்போது காய்கறிகளைப் பயிரிட்டு வளர வைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு 8000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.

ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • புகைப்படம்
  • நிலத்தின் அடங்கல்
  • நிலத்தின் சிட்டா
  • தொலைபேசி எண்

இவ்வாறு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோவில் வட்டாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலாகும். இதனால், செம்பனார் கோவில் வட்டாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை மிகுந்த ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். இவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த சிறப்பான சலுகை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பயன்பெறும் நபர்கள்

இந்த திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் 100% மானியத்தையும், இதர விவசாயிகள் 75% மானியத்தையும் பெறலாம். இவ்வாறு, பிரதம மந்திரி வழங்கும் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் எலக்ட்ரின் மோட்டார் வாங்குவதற்கு 15,000 ரூபாய், பி.வி.சி பைப் வழங்குவதற்கு 10,000 ரூபாய் மற்றும் தண்ணீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பதற்காக ரூ.40 ஆயிரமும் இந்த 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.

ஊக்கத்தொகை

இதனையடுத்து, காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8,000 வீதத்தில், 2½ ஏக்கர் வீதத்திற்கு ரூ. 20 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகையின் மூலம், தோட்டத்திற்குத் தேவையான இடுபொருள்களைப் பெற்று சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்