Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?

Gowthami Subramani September 26, 2022 & 15:40 [IST]
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், ஃபார்மிங் அமைப்பதற்கு தகுந்த முறையில் மானியம் வழங்கி வருகிறது. அதன் படி, செங்குத்து தோட்டம் அமைப்பதற்கு 50% மானியம் வழங்குகிறது. இது குறித்த விரிவான தகவல்களைப் பற்றி காண்போம்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?Representative Image

தோட்டக்கலை மானியம்

தற்போது, பெரும்பாலானோர் தோட்டக்கலை வைத்து செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அந்த வகையில், நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு தோட்டக்கலை பயன்பாடுகள் மிக அதிக அளவில் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். அதன் படி, செங்குத்து தோட்டம் என்பது Vertical Farming என ஆங்கிலத்தில் அழைக்கப்படக் கூடிய நவீன தோட்டக்கலையின் அங்கமாகக் கருதப்படுகிறது. இந்த செங்குத்து தோட்டக்கலை அமைப்பதற்கு அரசு தரும் மானியத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?Representative Image

செங்குத்து தோட்டக்கலையின் பயன்கள்

செங்குத்து தோட்டக்கலையைப் பொறுத்த வரை, இன்றும் பலரும் அறிந்த ஒன்று. இதன் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

செங்குத்து தோட்டக்கலை அமைக்க விரும்புபவர்கள், காய்கறிகள் மற்றும் அழகு செடிகளை குறைந்த இடத்திலேயே வளர்க்கலாம்.

விவசாய இடங்கள் பெரும்பாலும் அனைவரிடமும் இருப்பதில்லை. குறிப்பாக, பெருநகரங்களில் விவசாய நிலங்களைக் காண முடியாது.

எனவே, செங்குத்து தோட்டக்கலை மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடலாம்.

இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதுடன், நஞ்சு இல்லாத காய்கறிகளையும் அறுவடை செய்ய உதவுகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?Representative Image

செங்குத்து தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகள்

குறிப்பிடப்பட்ட பயன்பாடுகளை செங்குத்து தோட்டம் தந்த போதிலும், இதில் பயிரிடுவதற்கு ஒரு சில காய்கறிகளே ஏற்றவையாக அமைகின்றன.

புதினா

முள்ளங்கி

கீரைகள்

வெங்காயம்

கொத்தமல்லி

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?Representative Image

அரசு தரும் மானியம்

வீட்டிலேயே இயற்கையாக செங்குத்து தோட்டக்கலை வைப்பதற்கு அரசு மானியத் தொகை வழங்குகிறது. அதன் படி, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50% மானியத்தில் பெருநகரங்களுக்கு 40 சதுர அடிக்கு ரூ.15,000-ஐ பின்னேற்பு மானியமாக வழங்குகிறது. இது ஒரு சதுர அடிக்கு ரூ.375 வீதம் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?Representative Image

செங்குத்து தோட்டக்கலை மானியம் எப்படி பெறுவது?

செங்குத்து தோட்டக்கலை வைக்க நினைப்பவர்கள், கீழே கொடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://tnhorticulture.tn.gov.in/

இந்த இணையதளத்தில் TNHORTNET என்பதக் கண்டறிந்து க்ளிக் செய்ய வேண்டும்.

அந்தப் பக்கத்தில் விண்ணப்பிக்க என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, வரக்கூடிய பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து மானியத் தொகையைப் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்