Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?

Gowthami Subramani September 23, 2022 & 15:40 [IST]
விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயிகளுக்கும், விவசாயப் பெருமக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பான திட்டம் பிஎம் கிசான் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையினைப் பெற்று வருகின்றனர். அதன் படி, இந்த திட்டத்தில் மூன்று தவணைகளாக நான்கு மாதத்திற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

கிசான் கிரெடிட் கார்டு

அந்த வகையில், இந்த திட்டத்தில் மற்றொரு பயன்பாட்டினைக் கொண்டு வந்துள்ளது. இதில், விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும். இந்த கிரெடிட் கார்டுகளை விவசாயிகள் பெற்றுக் கொள்வதுடன் அவர்கள் கடன் பெறுவதை எளிதாக்குகிறது. இது மிகவும் பயனுள்ள திட்டமாக அமையும் என கூறப்படுகிறது. விவசாயிகள் கடன் பெறுவதற்கு ஒரு எளிமையான திட்டமாகும்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

கிசான் கிரெடிட் கார்டு பயன்கள்

விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு எளிதான முறையில் கடன் பெற முடியும்.

கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் பெறக் கூடிய கடன் தொகைக்கு மிகக் குறைவான வட்டி விகிதமே நிர்ணயிக்கப்படுகிறது.

இத்துடன் அரசு வட்டி மானியத்தையும் அளிக்கிறது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

கிசான் கடன் அட்டை பெற தேவையான ஆவணங்கள்

கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கு விவசாயிகள் இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • முழுமையாக நிரப்பப்பட்ட KCC விண்ணப்பப் படிவம்
  • நிலத்திற்கான ஆவணங்கள்
  • ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் – புகைப்பட ஆதாரங்கள்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 2
  • வங்கி கேட்கக்கூடிய பிற ஆவணங்கள்
விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

கிசான் கிரெடிட் கார்டு எப்படி பெறுவது?

விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டை நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

இருந்தபோதிலும், வங்கிக் கிளைக்கே செல்லாமலும் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என இரண்டு வங்கிகள் அறிவித்துள்ளது. அதன் படி, முதற்கட்டமாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஃபெடரல் பேங்க் போன்ற இரண்டு வங்கிகளும் டிஜிட்டல் முறையில் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதாகக் கூறியுள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

டிஜிட்டல் முறையில் கிரெடிட் கார்டு

இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு, மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற பேப்பர் வேலைகளே இருக்காது.

இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் திட்டமாகும். இந்த திட்டம் ரிசர்வ் வங்கியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதே போல, எளிமையான வழியில் டிஜிட்டல் முறையில் கிரெடிட் கார்டுகளைப் பெற நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்