Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gardening Tips for Indoor Plants: வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை இப்படி பராமரிக்கணும்…!

Gowthami Subramani [IST]
Gardening Tips for Indoor Plants: வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை இப்படி பராமரிக்கணும்…! Representative Image.

Gardening Tips for Indoor Plants: செடி வளர்ப்பது எந்த பகுதியாக இருந்தாலும், நாம் கவனிப்புடன் வளர்த்துவது நல்லது. அந்த வகையில், வீட்டிக்குள் வளர்ப்பதாக இருந்தால், நாம் கண்டிப்பாக கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றியே வளர்க்க வேண்டும். குறிப்பாக, வீட்டுற்குள் வளர்த்தும் செடிகளுக்கும், வீட்டிற்கு வெளியே அல்லது தோட்டத்தில் வளர்க்கும் செடிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

வீட்டுக்குள் அதாவது இண்டோர் செடிகள் என்பது தற்போது அனைவராலும் வளர்த்தப்பட்டு வருவதாகும். இன்று வீட்டிற்குள் வெளியே வளர்த்துவதை விட, வீட்டிற்கு உள்ளேயே அதிகமாக வளர்த்து வருகின்றனர். ஆனால், இந்தச் செடிகளை மிகவும் கவனிப்புடன் வளர்த்துவது என்பது முக்கியம். இவ்வாறு வீட்டிற்குள் வளர்த்தப்படும் இன்டோர் செடிகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், சீக்கிரமாகவே செடிகள் மடிந்துபோய் விடும். எனவே, இதனை எப்படி பராமரிக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

செடிகளை வளர்ப்பதற்கு முக்கியமானவற்றில் நிறைய உள்ளது. அந்த வகையில், தண்ணீர், சூரிய ஒளி, செடி வளர்த்தப்படும் இடங்கள், உரம், போன்றவற்றைக் கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கொண்டு கையாள வேண்டும்.

செடி வளர்க்கப்படும் தொட்டி

வெளிப்புறத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்குப் பயன்படுத்துவது போலவே, உட்புறத்தில் வளர்த்தப்படும் செடிகளுக்கும் தொட்டியைத் தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தொட்டியின் அடிப்புறத்தில், அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றக் கூடிய துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் இருப்பதால், செடியில் ஊற்றப்படும் தண்ணீர் விரைவாக இழுத்துக் கொள்ளாது. எனவே, தண்ணீரை சரியாக வெளியேற்றக்கூடிய துளைகளைக் கொண்ட தொட்டியைப் பயன்படுத்த வேண்டும்.

செடி வளர்ப்புக்கு உபயோகிக்கும் தண்ணீர்

மற்ற செடிகளுக்குத் தண்ணீர் விடுவதைப் போல, வீட்டிற்குள் வளர்த்தப்படும் செடிகளுக்கும் தண்ணீர் விடக் கூடாது. அதே போல, தண்ணீர் ஊற்றாமலும் இருக்கக் கூடாது. அதாவது மண் வெடித்துப் போகும் அளவிற்கு தண்ணீர் விடாமல் இருக்கக் கூடாது. வீட்டுக்குள் வளர்த்தப்படும் செடிகளின் தொட்டியில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்று, அதிக தண்ணீரை ஊற்றினாலும் வேர் அழிந்து விடக்கூடும். எனவே, வீட்டுக்குள் வளர்த்தப்படும் செடிகளுக்கு எப்போது தண்ணீர் தேவைப்படுகிறதோ அந்தந்த நேரத்தில் செடிக்கு தண்ணீர் விட வேண்டும்.

மிதமான தண்ணீர் வெப்பநிலை

தண்ணீரை அறை வெப்பநிலை இருக்கும் போது பயன்படுத்துதல் அவசியம். மிகுந்த குளிர்ந்த நீரையோ, அதிகமாக சூடாக இருக்கும் நீரையோ செடிக்குப் பயன்படுத்துதல் கூடாது.

இவ்வாறு குளிர்ந்த மற்றும் சூடான நிலையில் உள்ள தண்ணீரை ஊற்றுவதன் மூலம் செடிகள் செயலற்றதாக மாறிவிடும் அல்லது முற்றிலும் அழிந்து விடும்.

தேர்வு செய்யப்பட்ட இடங்கள்

குறிப்பாக வீட்டுக்கு வெளியே வளர்க்கப்படும் செடிகளுக்கு சரியான சூரிய ஒளி மற்றும் ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். புதிதாக ஒரு செடியை வளர்க்கும் போது, ஒரு இடத்தில் அந்த செடிகளை வைத்தால், அந்த இடத்தில் கிடைக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப மெதுவாகப் பழக வைக்க வேண்டும். அதுவரை, செடிகளை மாற்றி வேறு வேறு இடத்திற்கு வைக்கக் கூடாது. முக்கியமாக, ஒரு செடியை வெளிச்சமான இடத்தில் இருந்து நிழலான இடத்திற்கு நகர்த்தக் கூடாது. எனவே, சரியான அளவிலான ஈதப்பதம் இருப்பதுடன் வைக்க வேண்டும்.

காற்று கிடைக்கக்கூடிய இடங்கள்

மனிதனே காற்று இல்லாமல் இருக்க முடியாது. அப்படி இருக்கையில் செடி மட்டும் இருக்க முடியுமா.. தண்ணீர் எப்படி முக்கியமோ, அது போல செடிக்குக் காற்றும் முக்கியமாகும். எனவே காற்று கிடைக்கும் இடத்தில் செடிகளை வளர்த்த வேண்டும். பால்கனி, சன்னல் ஓரம் போன்ற பகுதிகளில் செடிகளை வளர்ப்பது என்பது மிக முக்கியமானது.

பயன்படுத்தும் உரம்

மனிதனுக்கு சாப்பாடு போல, செடிகளுக்கு உரம் என்பது முக்கியம். தேவையான நேரத்தில் சரியான உரங்களை செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இட வேண்டும்.

சூரிய ஒளி

சூரிய ஒளி என்பது மிக முக்கியமான ஒன்று. வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு சூரிய ஒளி மிகக் குறைந்த அளவில் காணப்படும். எனவே, சரியான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைத்து, செடி சூரிய ஒளி பெறுமாறு வைக்க வேண்டும்.

இவ்வாறு மேற்கூறிய வழிமுறைகளைப் பயன்படுத்தி பராமரித்தால் மட்டுமே, செடி நீண்ட நாள்களுக்கு நன்றாக வளரும். நம்மை நாம் எப்படி பாதுகாத்துக் கொள்கிறோமோ, அது போல செடியைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Gardening tips for Indoor Plants | How to take care of Indoor Plants at Home | Gardening tips for Indoor Plants in Tamil | Growing Indoor Plants in Water | Growing Indoor Plants From Seeds | Growing Indoor Plants From cuttings | Growing Indoor Plants for Beginners | Growing Indoor Plants Without Soil | Growing Indoor Plants in Clay Pebbles | Growing Indoor Plants With Led Lights | Growing Indoor Plants With artificial Light | Growing Indoor Plants Under Led Lights | Fast Growing Indoor Plants | Slow Growing Indoor Plants | Easy Growing Indoor Plants


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்