Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2022-23 ஆம் ஆண்டின் தோட்டக்கலைத் துறைக்கான மானியம் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani [IST]
2022-23 ஆம் ஆண்டின் தோட்டக்கலைத் துறைக்கான மானியம் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயத்திற்கும் விவசாயப் பெருமக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. மேலும், பல்வேறு மானியத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தோட்டக்கலைத்துறையில் மானியம் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறை மானியம்

தோட்டக்கலைத் துறைக்கு உதவும் வகையில் மானியம் வழங்கப்படுவதற்கான ஒரு முக்கிய அறிவிப்பை கோவை மாவட்டத்தின் துணை இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, தோட்டக்கலை செய்து வரும் விவசாயிகள் மற்றும் புதிதாக விவசாயம் சார்ந்த தொழில்களை செய்ய முயற்சிப்பவர்கள் போன்றோர்களுக்கு இது பெரிதும் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

2022-23 ஆம் நிதியாண்டில் மலை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படக் கூடிய அனைத்துத் திட்டங்களிலும் இணையதளம் வாயிலாக பதிவு செய்த விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மானியம் வழங்க பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி

https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/

இந்த குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் முறையாக பதிவு செய்து பயன் பெறலாம். இதில் பதிவு செய்யத் தெரியாத விவசாயிகள் அல்லது பதிவு செய்ய இயலாத விவசாயிகள், அவரவர்களின் வட்டாரத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்குச் சென்று தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலை மானியம் பெற தேவையான ஆவணங்கள்

ஆதார் எண்

விவசாயி பெயர்

மாவட்டம்

வட்டம்

கிராமம்

வீட்டு முகவரி

அஞ்சல் குறியீடு எண்

அலைபேசி எண்

மேலே குறிப்பிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்கலாம்.

தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

RAD - நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு

NBM - தேசிய மூங்கில் இயக்கம்

TNIAMP - தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்

NADP - தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்

IHDS - ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்

NAM - தேசிய ஆயுஷ் இயக்கம்

NHM - தேசிய தோட்டக்கலை இயக்கம்

இந்த திட்டங்கள் அனைத்தும் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ளன. இதில் மானியம் பெற விரும்பும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி பதிவு செய்து மானியம் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்