Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

முருங்கையில் கலக்கும் கரூரில் சர்வதேசமுருங்கை கண்காட்சி.. பிரேசில், துபாய், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்பு…!

Gowthami Subramani October 31, 2022 & 18:05 [IST]
முருங்கையில் கலக்கும் கரூரில் சர்வதேசமுருங்கை கண்காட்சி.. பிரேசில், துபாய், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்பு…!Representative Image.

கரூரில் மாபெரும் முருங்கைக் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது முருங்கைக்காய் என்றாலே, கரூர் மாவட்டம் தான் பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வரும். ஏனெனில், கரூர் மாவட்டத்தில் தான் முருங்கைக்காய் மிகவும் மலிவாக கிடைக்கக் கூடியதாக அமைகிறது. இத்துடன், முருங்கைக்குப் பெயர் போன கரூரில், முருங்கையை வைத்து அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கரூரின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைகிறது.

இந்நிலையில், முருங்கைக்கு சிறந்த இடமாகவே கருதப்படும் கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் உள்ள அரங்கில் இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியராக விளங்கும் ஷங்கர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயரான தாரணி சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “காலத்திற்கும், நிலைத்து நிற்கும் வகையிலும், விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையிலும், இந்த கண்காட்சி நடைபெறும். மேலும், இந்தியாவின், உலகின் முருங்கையின் தலைநகரமாக கரூர் அமையும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அந்த கூட்டத்தில் கூறப்பட்டதாவது, கரூரில் வரும் நவம்பர் 4,5 மற்றும் 6 ஆகிய நாள்களில் சர்வதேச அளவிலான முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், பிரேசில், ஜப்பான், கொரியா, மலேசியா, ஸ்ரீலங்கா, துபாய், லெபானன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள முருங்கை விவசாயிகள், இளம் தொழில் முனைவோர்கள், மேம்படுத்தப்பட்ட பொருள்களின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றோர் இந்த கண்காட்சியில் பங்கு பெறலாம். இந்த கண்காட்சியில் முருங்கை மற்றும் முருங்கையால் மதிப்பு கூட்டப்பட்ட 27 வகைப் பொருள்கள் காட்சிபடுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யக் கூடிய முறைகளை செயல்படுத்துதல், ஏற்றுமதி செய்யும் முறைகள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மேம்படுத்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த வல்லுநர்களின் ஆலோசனைகள் போன்றவை கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சி மூலம், விவசாயத்தை குறிப்பாக கரூரில் முருங்கை உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், முருங்கை உற்பத்தியை அதிகப்படுத்துவதுடன், இது சார்ந்த தொழிலை மேம்படுத்தவும், அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது எனவும் கூறப்பட்டது.

மேலும், தற்போது நடைபெற்று வரும் 80 கோடி ரூபாய் அளவிலான முருங்கை வணிகத்தை 120 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்