Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nano Urea Benefits in Tamil: நானோ யூரியா என்றால் என்ன? முக்கியத்துவம், பயன்பாடுகள், குறித்த முழு விவரங்கள். இந்த யூரியாவால், லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani [IST]
Nano Urea Benefits in Tamil: நானோ யூரியா என்றால் என்ன? முக்கியத்துவம், பயன்பாடுகள், குறித்த முழு விவரங்கள். இந்த யூரியாவால், லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Nano Urea Benefits in Tamil: சமீபகாலமாக, விவசாயத் துறையில் அனைவரும் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பது நானோ யூரியா என்ற வார்த்தையைத் தான். இது இந்தியா முதலீடுகளை சேமிப்பதற்கான வழியைத் தந்துள்ளது. இந்த நானோ யூரியா உற்பத்தி முறைகள் பயன்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் எதிர்கால இந்தியாவில் நானோ யூரியாவின் பங்கு முதலிய அனைத்து விவரங்களையும் இந்தப் பதிவில் காண்போம்.

நானோ யூரியா அறிமுகம்

நானோ யூரியாவை கூட்டுறவு IFFCO நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் நாள் குஜராத்தின் கலோலில் உள்ள IFFCO ஆலையில் இருந்து, இதற்கான உற்பத்தி வணிகரீதியாக தொடங்கியது.

அது மட்டுமல்லாமல், ஏழு நானோ ஆலைகளை IFFCO மற்றும் இரண்டு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களான, RCF மற்றும் NFL ஆகியவை நிறுவுகின்றன. மேலும், இந்த இரண்டு பொதுத் துறை நிறுவனங்களுக்கும், IFFCO நானோ யூரியா தொழில்நுட்பத்தை இலவசமாக மாற்றியுள்ளது.

நானோ யூரியா என்றால் என்ன?

நானோ யூரியா என்பது பயிர்களின் ஊட்டச்சத்து திறனை மேம்படுத்துவதற்காக, நானோ தொழில்நுட்ப உதவி கொண்டு உற்பத்தி செய்யப்படும் யூரியா ஆகும். இந்த திரவமானது வழக்கமான யூரியா தேவையை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இது விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் தேவையைக் குறைந்தபட்சம் 50% ஆவது குறைக்கும் தன்மை உடையதாகக் காணப்படுகிறது.

நானோ யூரியா தயாரிக்கும் முறை (Nano Urea Production Process)

யூரியா மூலக்கூறுகள் மற்றும் டிரைசோடியம் சிட்ரேட் ஆகியவற்றைக் கலந்து ஒரு உகந்த சூழ்நிலையில் தயாரிக்கப்படுவதே நானோ யூரியா ஆகும்.

ஒரு பீக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

0.30 கிராம் அளவுள்ள யூரியா மூலக்கூறுகள் மற்றும் 0.86 கிராம் அளவுள்ள டிரைசோடியம் சிட்ரேட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பீக்கரில் மேலே கூறப்பட்ட 0.30கி யூரியா மூலக்கூறுகள் மற்றும் 0.86கி டிரைசோடியம் சிட்ரேட்டுகளைக் கலக்க வேண்டும்.

அதன் பின், அந்த கலவையை ஒரு சூடான தட்டைப் பயன்படுத்தி 90 டிகிரி செல்சியஸ் வரை 1 மணி நேரத்திற்கு சூடேற்ற வேண்டும்.

நானோ யூரியாவின் பயன்கள் (Nano Urea Uses)

விவசாயத்தில் யூரியாவைப் பயன்படுத்துவதைப் போலவே நானோ யூரியாவையும் பயன்படுத்துகிறோம். இந்த நானோ யூரியாவான் பயன்பாடுகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மண்ணின் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.

இது மண், காற்று, மற்றும் நீர் மாசுபாட்டைக் குறைக்கும் காரணத்தால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நானோ யூரியம் கருதப்படுகிறது.

இது மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்திற்கும் பாதுகாப்பானதாக அமையக்கூடியதாகும் (Nano Urea Benefits in Tamil).

வழக்கமாக பயன்படுத்தப்படும் யூரியாவின் அளவை விட இது பாதியளவு இருந்தால் போனது. அதாவது, வழக்கமாக பயன்படுத்தும் யூரியாவை குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவிற்கு குறைவாகப் பயன்படுத்த உதவுகிறது.

நானோ யூரியாவின் முக்கியத்துவம்

இந்த நானோ யூரியாவைப் பயன்படுத்துவதால், ஏராளக்கணக்கான நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன.

நானோ யூரியாவால், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் யூரியா இறக்குமதி செய்ய அவசியம் இல்லை என மத்திய ரசாயன மற்ரும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நானோ யூரியாவைப் பயன்படுத்துதலால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய இறக்குமதிக்கான அந்நிய செலவாணியைக் குறைக்கலாம்.

இவ்வாறு நானோ யூரியா வேளாண் துறையில் முக்கிய பங்காற்றுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்