Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளே உஷார்…! இத சீக்கிரம் செய்து முடிங்க.. இல்லனா உங்களுக்குப் பணம் கிடைக்காது… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Gowthami Subramani August 11, 2022 & 16:25 [IST]
விவசாயிகளே உஷார்…! இத சீக்கிரம் செய்து முடிங்க.. இல்லனா உங்களுக்குப் பணம் கிடைக்காது… தமிழக அரசின் முக்கிய அறிவிப்புRepresentative Image.

மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதன் படி, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசு அமல்படுத்திய திட்டமான பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைகிறது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை விவசாயிகளுக்கு அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கான திட்டம்

விவசாயிகளுக்கு நலன் தரும் வகையில் அமைந்த பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம், 100 சதவீத பங்களிப்புகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் நிதிஉதவித் தொகையான ரூ.6,000 ஆண்டுக்கு மூன்று முறை என தலா ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் எண் அடிப்படையிலே

இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவியில் 12 ஆவது தவணத் தொகை வர உள்ளது. இதற்கான சில முக்கிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்ம் விடுவிக்கப்படக் கூடிய அனைத்துத் தவணைத் தொகைகளுமே விவசாயிகளின் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விரைவில் செய்ய வேண்டியவை

ஆதார் எண் அடிப்படையில் பெறப்படும் நிதித் தொகையைப் பெறுவதற்கு அரசு அறிவித்துள்ள அறிக்கையின் படி, ஆதார் எண்ணை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது.

அதாவது, இதில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

பின்னர், இவ்வாறு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP-ஐ பதிவிட்டு, ஆதார் எண்ணை உறுதி படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை அப்டேட் செய்ய இயலாதவர்கள், நேரடியாக அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டும்.

அங்கு சென்று தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர், ஆதார் எண்ணை அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள அறிக்கையின் படி, விவசாயிகள் 12 ஆவது தவணத்தொகையைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதித் தொகை வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

PM Kisan 12 th Installment Date 2022 | PM Kisan Scheme | Farmers Schemes in Tamilnadu | Farmers Scheme in Tamil | PM Kisan scheme for farmers Benefits tamil | How to Check Amount on PM Kisan Scheme | PM Kisan Samman Nidhi Scheme Tamil | PM Kisan Samman Nidhi Scheme | PM Kisan Scheme | PM Kisan Status Check | PM Kisan Next Installment | PM Kisan Installment Status | PMKisan Gov in | PM Kisan Status Check 2022 12th Installment Date | PM Kisan Beneficiary Status 11th Installment | PM Kisan Gov in Login | PM Kisan 12 Installment Date 2022 | PM Kisan 12 Installment Date | 12 Installment PM Kisan | PM Kisan samman nidhi 12 Installment Date | PM Kisan Installment Amount | PM Kisan how many Installment | PM Kisan 12th Installment Date 2022 | PM Kisan 12th Installment Date | 12th Installment of PM Kisan | PM Kisan.Gov.in 12th Installment | PM Kisan Next Installment 12th Installment Date | PM Kisan 12th Installment Date 2022 | PM Kisan Status 12th Installment Date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்