Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. பாதி விலையில் கிடைக்கும் டிராக்டர்.. எப்படி பெறுவது ..? முழு விவரங்களும் இங்கே…!

Gowthami Subramani August 10, 2022 & 14:45 [IST]
விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. பாதி விலையில் கிடைக்கும் டிராக்டர்.. எப்படி பெறுவது ..? முழு விவரங்களும் இங்கே…!Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மானியம், சலுகை உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த வரிசையில், விவசாயிகளுக்குப் பாதி விலையில் டிராக்டர்கள் கிடைப்பதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் பாதி விலையில் டிராக்டர்களைப் பெறலாம்.

மானிய உதவி

மத்திய அரசு அறிமுகப்படுத்திய டிராக்டர் யோஜனாத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கான மானிய உதவி வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த சிறப்பான வாய்ப்பை சரியாக முறையில் பயன்படுத்துமாறு வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பிரதம மந்திரி திட்டம்

இந்தியாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், ஆண்டுதோறும் ரூ.6,000 பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கும், சிறப்பான வசதிகளை வழங்கவும் அரசு உதவி செய்து வருகிறது. இது தவிர, விவசாயம் செழிக்க வைப்பதற்குத் தேவையான உரம், விதை மற்றும் மின்சாரங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையிலே, தற்போது டிராக்டருக்கான மானியத் தொகை வழங்கவும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. டிராக்டரை சொந்தமாக வாங்க முடியாமல், பெரும்பாலான விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் டிராக்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

டிராக்டருக்கான மானியம்

பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ், டிராக்டர்களை சொந்தமாக வாங்க விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக தாழ்ந்த விவசாயிகள் பாதி விலையில் டிராக்டர்களைப் பெறலாம். மீதி பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது.

விவசாயிகள் வாங்கக்கூடிய எந்த டிராக்டராக இருந்தாலும், இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, மானியத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவில் மாநில அரசுகளும் டிராக்டர் வாங்குவதற்கு மானிய உதவியை வழங்குகின்றன.

டிராக்டருக்கு மானியம் பெறுவதற்கான தகுதி

இந்தத் திட்டத்தில் பயன்பெற நினைக்கும் இந்திய குடிமக்கள் 18 முதல் 60 வயது வரை கொண்டிருக்கலாம்.

குறிப்பாக, இதில் சேர்ந்து பங்கு பெற நினைக்கும் விவசாயிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

டிராக்டர் வாங்குபவரின் பெயரிலேயே சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்.

மேலும், அவர்கள் வேறு எந்த மானியத் திட்டங்களிலும் உதவி பெறுபவர்களாக இருக்கக் கூடாது.

குறிப்பாக, இந்தத் திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

டிராக்டர் மானியம் பெறுவது எப்படி?

இதில், பதிவு செய்ய விரும்பும் நபர்கள், கீழ்க்கண்ட முறையில் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

முதலில் விவசாயிகள் அருகே உள்ள இ-சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கு சென்று, ஆதார் அட்டை, நிலத்தின் பத்திரம், வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

மத்திய அரசின் இந்த சிறப்பான திட்டத்தால், விவசாயிகள் பெரிதும் பயனடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tractor Subsidy Scheme in Tamilnadu | SCST Subsidy Tractor | Tractor Subsidy Scheme 2022 | Tractor Subsidy in Tamilnadu 2022 | PM Kisan Tractor Scheme Online Apply | Tractor Subsidy Scheme 2022 in Karnataka | PM Kisan Tractor yojana Karnataka 2022 Online Apply | Tractor Subsidy in Tamilnadu 2022 Apply Online | Farmer Tractor Scheme | PM Farmer Tractor Scheme | Farmer Tractor Price | Farmer Approved Tractor Meals | Farmer benefits Scheme | Tractors used in Farming | Tractor Subsidy List


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்