Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் பெரிய சிக்கல்…! பணத்தைத் திருப்பிச் செலுத்த அரசு உத்தரவு….!

Gowthami Subramani June 13, 2022 & 17:30 [IST]
PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் பெரிய சிக்கல்…! பணத்தைத் திருப்பிச் செலுத்த அரசு உத்தரவு….!Representative Image.

PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறும் நபர்களை உடனடியாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக, இத்திட்டத்தின் மூலம் பங்கு பெறும் நபர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். மேலும், இத்திட்டத்தில் பெற்ற தொகையை செலவழித்த நிலையில், எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்ற தடுமாற்றத்தில் உள்ளனர் (Kisan Yojana Samman Nidhi).

PM கிசான் திட்டம்

மத்திய அரசு பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயத்தையும், விவசாயிகளின் குடும்பங்களையும் காப்பாற்றும் வகையில் அமைந்ததே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இத்திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் விவசாயம் செய்து வரும் நபர்களுக்கு ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது (PM kisan nidhi yojana). அதன் படி, ஒரு ஆண்டுக்கு மூன்று தவணை வீதம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 மத்திய அரசு அனுப்புகிறது.

பயன்பெறும் நபர்கள்

இவ்வாறு விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் அமையக் கூடிய இத்திட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்குமே நிதியுதவி கிடைத்துவிடாது. இந்த பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெற முடியும் (PM Kisan Samman Nidhi Yojana Scheme).

இந்தத் திட்டம், குறிப்பாக ஏழை விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் அமையக் கூடிய திட்டம் ஆகும். இதனால், இந்த சிறப்பான திட்டத்தில் பயிரிடக் கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள் பயன்பெற முடியும். மேலும், இதில் வருமான வரி செலுத்தும் நபர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர்கள் பயன்பெற முடியாது. இது வரை, பிஎம் கிசான் திட்டத்தில், 11 தவணைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதன் படி, 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவிப் பெற்றுள்ளனர் (Farmers Schemes in Tamilnadu).

திட்டத்தில் உள்ள சிக்கல்கள்

விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் அமைந்த இந்தத் திட்டத்தில், மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய அரசு வழங்கும் இந்த நிதி தகுதியற்ற நபர்களுக்கு செல்வதாகவும், நிதியுதவி பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவருமே நிதியுதவி பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன (Tamilnadu Formers Schemes).

அரசு உத்தரவு

இவ்வாறு, அரசு குறிப்பிடப்பட்ட அறிவிப்பில் இல்லாதவாறு, பல்வேறு முறைகளில் நிதிகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பிஎம் கிசான் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் தகுதியுடைய நபர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தகுதியுள்ளவர்களுக்கு நிதியுதவி கிடைக்காமல் போகிறது (Central Government Schemes for Farmers). மேலும், இந்த குற்றச்சாட்டுகளில் நில விவரங்களைத் தவறாக உபயோகப்படுத்துவதும் அடங்கும். இதன் காரணமாக, சட்ட விரோதமாக நிதியுதவிகளைப் பெற்றவர்களும், தகுதியில்லாத நபர்களும் உடனடியாக அரசிடம் இருந்து பெற்ற நிதியுதவியைத் திரும்ப வழங்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது (Tamilnadu Latest Schemes).

தீவிர நடவடிக்கை

இது போல, வருமான வரி செலுத்துபவர்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து நிதியுதவி பெறுவதால், சாதாரண பாமர மக்களுக்கு நிதி உதவி கிடைக்காமல் போகிறது. இதில், கணவன், மனைவி இருவருமே நிதியுதவி பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விதிமுறைகளை மீறி நடப்பதாகும். அதன் படி, இந்த வகைகளில் நிதியுதவிகளைப் பெறும் நபர்களைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக திட்டத்திலிருந்து வெளியேற்ற மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்