Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Meenam Rasi Palan October 2022 In Tamil : ஏழரை சனி வருவதால் மீன ராசி என்ன தான் நடக்கும்..?

Manoj Krishnamoorthi September 28, 2022 & 11:05 [IST]
 Meenam Rasi Palan October 2022 In Tamil : ஏழரை சனி வருவதால் மீன ராசி என்ன தான் நடக்கும்..? Representative Image.

மீன ராசிக்காரரே உங்கள் ராசிக்கு 2022 அக்டோபர் மாதம்  செவ்வாய் 3 இல் இருந்து 4 இல் மாறுவது,  7 இல் சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கை, 11 இல் சனி   இருப்பதால் இந்த அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி செயல்கள் நடக்குமா..? என்பதை பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவை பின்தொடரவும். 

அக்டோபர் மாத ராசிபலன் 2022- மீனம் (Meenam Rasi Palan October 2022 In Tamil) 

 

பொது பலன்:

மாதத்தின் முற்பகுதி சிறப்பாக இருக்கும் ஆனால் பிற்பகுதியில் மற்றவர்கள் மூலம் சங்கடங்கள் வரும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, நல்ல இடத்தில் முதலீடு செய்ய முடியும். குடும்ப சார்ந்த எந்த முடிவும் ஆலோசிக்காமல் எடுக்க வேண்டாம். 

குடும்ப வாழ்க்கை:

2 இல் இராகு இருப்பதால் குடும்பத்தில் சொல்லும்படியான பலன் இல்லை. மாதத்தின் முற்பகுதியில் பாதிப்பு இல்லை ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் சில சந்தேகம் உருவாகும்.  குடும்ப வாழ்வில் மூன்றாவது மனிதர் மூலம் மன வருத்தம் அளிக்கும். காதல் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்படும், பொறுமை காக்க வேண்டும். குடும்ப செலவுகள் இந்த மாதம் அதிகமாக இருக்கும். 

தொழில்:

11 இல் சனி இருப்பதால் தொழிலில் நல்ல பலன் அளிக்கும்,பண வரவு மாதத்தின் முற்பகுதி நன்றாக இருக்கும். கல்வியில் பிரச்சனை இல்லை. உயர்கல்வி ஆலோசனை அதிகமாக ஏற்படும்.  செல்வ நிலை நன்றாக உள்ளது, முதலீடு செய்ய சிறந்த நேரமாக இருக்கும்.  

உடல்நலம்:

2 இல் இருக்கும் இராகு சளி, காய்ச்சல் போன்ற சிறிய உடல் உபாதைகள் அளிக்கும். வயதான மீன ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக உள்ளது. 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 24, 25, 26

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்