Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan Tamil 2022: இந்த வாரம் அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டத்தைக் காணும் ராசிக்காரர் நீங்களா! வார ராசிபலன் (3:07:22-  9:07:22)

Manoj Krishnamoorthi July 02, 2022 & 13:00 [IST]
Next Week Rasi Palan Tamil 2022: இந்த வாரம் அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டத்தைக் காணும் ராசிக்காரர் நீங்களா! வார ராசிபலன் (3:07:22-  9:07:22)Representative Image.

சுபகிருது ஆனி மாதத்தில் இந்த வாரத்தின் (ஜூலை 3 முதல் ஜூலை 9 2022) வார ராசிபலனில் (Next Week Rasi Palan Tamil 2022) உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காண்போம்.


Representative Image. மேஷம் முதல் கன்னி ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


துலாம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் எதிர்பார்க்காத பாராட்டு கிடைக்கும், தந்தை வழியில் பல நன்மைகள் நடக்கும். தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். தொழிலில் அதீத கவனம் தேவைப்படும், சிறிய அலட்சியம் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கும். நில பரிவர்த்தனைகளில் தலையிட வேண்டாம். பணப் பரிவர்த்தனை நன்றாக உள்ளது.

திருமண பாக்கியம் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பேறு எதிர்பார்த்த துலாம் ராசிக்காரருக்கு குழந்தை பாக்கியம் இருக்கும். சுப நிகழ்ச்சியில் பங்களிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

சித்திரை: தொலைதூர பயணம் இருக்கும்.

சுவாதி: நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

விசாகம்: கவனமாக இருந்தால் நன்மைகள் அதிகமாக அமையும். 

வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வம்.

விருச்சிகம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக அமையும், பல நாட்களாக உங்கள் மனதில் அரித்து கொண்டு இருந்த பிரச்சனைக்கு இந்த வாரம் நல்ல தீர்வு பிறந்து மனம் அமைதியாகும். தொழிலில் ஒரு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வெற்றிக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும்.

வீட்டில் சிறிய மன வருத்தமான நிகழ்வுகள் நடக்கும். நல்ல கல்வி நிலைத்தில் படிக்க வாய்ப்பு அமையும். உடல்நலம் நன்றாக உள்ளது. கடன் உதவி கிடைக்கும்.

விசாகம்: போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

கேட்டை: பண உதவி கிடைக்கும்.

அனுஷம்: நிம்மதியான மனநிலை.

வழிபட வேண்டிய தெய்வம்: திருப்பதி வெங்கடாசலபதி

தனுசு

பொது பலன்:  உங்களுக்கு வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சில கஷ்டங்கள் இருந்தாலும் அதன்பிறகு இயல்பான நிலை பிறக்கும். யாரையும் எளிதில் நம்பக்கூடிய நீங்கள் சற்று சாதுரியமாக நடக்க தொடங்குவீர்கள். கூட்டு தொழில் நல்ல லாபம் அளிக்கும்.

வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும். ஆரோக்கிய குறை சரியாகும். பல நாட்களாக தேடிய பொருட்கள் கிடைக்கும்.

மூலம்: புதிய அறிமுகம் கிடைக்கும்.

பூராடம்: குடும்பத்தினரின் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும். 

உத்திராடம்: மனம் நிம்மதியுடன் இருப்பீர்கள். 

வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வம்  

சந்திராஷ்டமம்: ஜுலை 3 

மகரம்

பொது பலன்: இந்த வாரம் அபாரமான தொழில் வளர்ச்சி இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும். செய்யும் செலவு சுப செலவு இருப்பதால் மன வருத்தம் கொள்ளாது, புதிய சொத்து வாங்குவீர்கள். சிறப்பான பணப்புழக்கம் கையில் இருக்கும்.

சுகமான இல்லற வாழ்க்கை அமையும்.  கல்வி நிலை அமோகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகிக் கொள்ளவும்.

உத்திராடம்: சுப நிகழ்ச்சி நடக்கும்.

திருவோணம்: நல்ல பண வரவு உண்டு.

அவிட்டம்: செய்யும் காரியம் வெற்றியில் முடியும். 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

சந்திராஷ்டமம்: ஜூலை 4, 5 

கும்பம்

பொது பலன்: இந்த வாரம் தொழிலில்  சில மாற்றம் ஏற்படும், உருவாகும் மாற்றம் உங்களுக்கு சாதகமாக அமையும். கல்வியில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும், காதல் கைகூடும். வீட்டில் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். மனம் தைரியமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

சதயம்: குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளுவீர்கள்

அவிட்டம்: பொருளாதாரம் ஏற்றம் கொள்ளும்.

பூரட்டாதி: மன உறுதி பல காரியங்களை செய்து காட்டுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

சந்திராஷ்டமம்: ஜூலை 6, 7

மீனம்

பொது பலன்: தொழிலில் நல்ல முன்னேற்றம் உள்ளது, எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். உங்கள் பேச்சின் மூலம் செல்வாக்கை இழப்பீர்கள். தொழிலில் அதிகமாக உழைக்க வேண்டும், அதற்கான லாபத்தைப் பெற முடியும். 

வீட்டில் சிறிய வாக்குவாதம் வரும். உங்கள் உடல்நலத்தில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை அளிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும்.  

பூரட்டாதி: நற்செயல்கள் நடக்கும், பொருளாதார ஏற்றம் உண்டு.

உத்திரட்டாதி: பண வரவு உண்டு.

ரேவதி: உறவினர் மத்தியில் இருந்த பிரச்சனை சரி செய்து கொள்ளுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

சந்திராஷ்டமம்: ஜூலை 8, 9

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்