Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasipalan in Tamil: இந்த வாரம் குடும்ப வாழ்க்கை,  தொழில் என அனைத்து ஏரியாவிலும் நல்ல ரிசல்ட் பார்க்கப்போகும் ராசிக்காரர் நீங்களா.... வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 02, 2022 & 11:00 [IST]
Next Week Rasipalan in Tamil: இந்த வாரம் குடும்ப வாழ்க்கை,  தொழில் என அனைத்து ஏரியாவிலும் நல்ல ரிசல்ட் பார்க்கப்போகும் ராசிக்காரர் நீங்களா.... வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாதம் 19- 25 (3:07.2022- 9:07:2022) வரை வார ராசிபலனில் மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசிகள் இந்த வாரம் பெறப்போகும் பலன் பற்றி இவ்வாசத்தில் காண்போம்.

வார ராசிபலன் (Next Week Rasipalan in Tamil)

மேஷம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த வாரம் உங்களுக்கு சந்திரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக உள்ளது, குடும்பத்தில் தாய் மற்றும் தந்தை மூலம் பல நன்மைகள் நடக்கும். உறவினர் மூலம் உங்களுக்கு இந்த வாரம்  சில ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் சந்தோஷம் அதிகமாக இருக்கும் அதை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுவீர்கள். திடீரென பல நன்மைகள் இந்த வாரம் நடக்கும்,  தொழிலில் அபாரமான ராஜயோகம் இருக்கும். 

முக்கியமாக மேஷ ராசிக்காரரின் உடன்பிறந்தவர்களுக்கு சிறிய மருத்துவ செலவு ஏற்படும். நல்ல நிதி நிலை உள்ளது. நல்ல உடல்நலம் இருக்கும்.

அஸ்வினி: ஆதாயமான வாரமாக அமையும். 

பரணி: மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கிருத்திகை: நல்ல மாற்றங்கள் பல நிகழும். 

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:   பெருமாள்

ரிஷபம்

பொது பலன்: உங்க ராசியில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை தொழிலில் மாற்றத்தை உருவாக்கும், புதிய தொழில் அமையும் அல்லது இரண்டாம் தொழில் மேம்படும். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு இந்த வாரம் வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.

வீட்டில் சிறிய தகராறு ஏற்படும், முக்கியமாக மற்றவர்களின் மூலம் வீட்டில் பிரச்சனை உதிக்கும். கல்வி நிலை சுமாராக இருக்கும். ஆரோக்கியம் கெடும்.

கிருத்திகை: மாற்றங்கள் அதிகமாகும்.

மிருக ஸீரிஷம்: தொழில் மாற்றம்.

ரோகிணி: நல்ல செல்வ நிலை இருக்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

மிதுனம்

பொது பலன்: இந்த வாரம் கையில் பணப் புழக்கம் நன்றாக இருக்கும், எதிர்க்காத பல நன்மைகள் இந்த வாரம் நடக்கும். தொழிலில் அனுபவம் வாய்ந்த மனிதரின் உதவி மிகவும் உதவிக்கரமாக அமையும். புதிய ஆர்டர்கள் வியாபாரத்தில் அமையும். 

குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும், கல்வி நிலை அமோகமாக இருக்கும், மனம் அமைதியாக இருக்கும். சகோதர வழியில் நன்மைகள் நடக்கும்.

மிருக ஸ்ரிஷம்: நன்மைகள் பல நண்பர்களின் மூலம் கிடைக்கும்.

திருவாதிரை:  பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

புனர் பூசம்: ஆசைகள் நிறைவேறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ண பகவான்

கடகம்

பொது பலன்: உங்களின் ராசிக்கு இந்த வாரம் சில தவிர்க்க முடியாத விரையச் செலவு வரும். குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு வரும். நிலையான தொழில் முன்னேற்றம் இருக்கும், செய்த முதலீடுகள் நல்ல பலன் அளிக்கும், இந்த சமயத்தில் உதவிக்கரமாக அமையும். 

வீட்டில் இயல்பான நிலை இருக்கும், காதல் வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.  உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றால் உடல் சோர்வாக இருக்கும். 

புனர் பூசம்: மறைமுகமாக சில உதவிகள் கிடைக்கும்.

பூசம்: புதிய தொழிலை அமைத்து கொள்ள முயல்வீர்.

ஆயில்யம்: வழக்கமான வேலைகள் சற்று தாமதமாக செய்வீர்கள். 

வழிபட வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர்.

சிம்மம்

பொது பலன்: இந்த வாரம் தொழில், குடும்பம், செல்வம் என அனைத்து ஏரியாவிலும் நீங்கள் நன்மை பார்க்க முடியும். தொழிலில் அறிமுகமில்லாத மனிதரின் உதவியால் உங்களுக்கு கிடைக்கும்.  நிதி நிலை நன்றாக உள்ளது. தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும், நண்பர்களின் உதவி மிகவும் பலமாக இருக்கும்.

குடும்பத்தில் இந்த வாரம் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு இந்த வாரம் பல நாட்களாக நினைத்த ஆசை நிறைவேறும் தருணமாக அமையும். உடல்நலத்தில் பிரச்சனை எதுவுமின்றி இன்பமாக இருப்பீர்கள். 

மகம்: உதவிகள் தேடி வரும்.

பூரம்: எதிர்பார்த்த ஆதரவு நண்பர்களிடம் இருந்து கிடைக்கும்,

உத்திரம்: திருமணத் தடை நீங்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: நடராஜர்

கன்னி

பொது பலன்: உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் அமோகமாக இருக்கும்,வேலையிடத்தில் பணிகள் சிறப்பாக நடக்கும். வண்டி வாகன செலவுகள் வரும். மற்றவரின் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பதால் இந்த வாரம் நலமான வாரமாக அமைத்துக் கொள்ள முடியும். சற்று செலவு அதிகமாக இருக்கும்.

குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர்கள், கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். எதிர்பாராத ஆரோக்கிய கோளாறு உருவாகும். மாணவர்களின் நிலையில் பிரச்சனை இல்லை.

 உத்திரம்: பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பீர்கள்.

அஸ்தம்: ஆரோக்கிய கோளாறு வரும்.

சித்திரை: தேவையில்லாத செலவு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி


Representative Image. துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்