Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Raasipalan: இந்த ராசிக்காரர் இன்னிக்கு வெளியில் வந்தால் பிரச்சனை தான்….ஜூலை 6, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 05, 2022 & 14:30 [IST]
Indraya Raasipalan: இந்த ராசிக்காரர் இன்னிக்கு வெளியில் வந்தால் பிரச்சனை தான்….ஜூலை 6, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                       Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 05:30-  6:00 வரை

Indraya Raasipalan


மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி ராசிபலன் (6:07:2022) பற்றி அறிய க்ளிக் செய்யவும். 


துலாம் (Libra 2022 Horoscope)

உங்களின் விடாமுயற்சியால் பல நற்பலன் கிடைக்கும் விஷயத்தை உருவாக்கிவிடுவீர்கள், நல்ல பண வரவு இருக்கும். பணியிடத்தில் சுமுகமான சூழல் அதிகமாகும், மற்றவர்களிடம் பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்து கொள்வீர்கள். 

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும், வீட்டில் இனிமையான தருணங்கள் இருக்கும். கல்வி நிலை சிறப்பாக உள்ளது, புதிய ஞானம் பெறுவீர்கள். சீரான உடல்நலம் இருக்கும். சுகம்!   

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்றைய நாள் முழுவதும் கலகலப்பான மனநிலையில் இருப்பீர்கள், பணியிடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். மகிழ்ச்சியான நிதி நிலை கையில் இருக்கும், வியாபாரத்தின் மூலம் நல்ல வருமானம் இருக்கும். 

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். திருமண வாழ்வில் இன்றைய தினம் ஆனந்தமாகக் களிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சல்வி நிலையில் கவனம் சிதறும், பிறரின் அறிவுரை மனதை புத்துணர்ச்சி ஆக்கும். மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் மனதிலிருந்த குழப்பத்தை நீக்கி தெளிவான மனநிலையை பெற உதவும். தொழிலில் நன்மைகள் அதிகமாகும், பண வரவு அதிகமாகும்.  உத்தியோகஸ்தருக்கு பணியிடத்தில் இன்று இனிமையாக இருக்கும். சுய தொழில் செய்யும் தனுசு ராசியாளருக்கு எதிர்பார்த்த லாபம் இருக்கும். 

வீட்டில் இன்பமான சூழல் நிலவும். அன்பான இல்லறம் உருவாகும்.   மனம் அமைதியாக இருப்பதால் சுற்றத்தாருடன்  நல்லுறவு இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களை இன்று பிறர் அக்கறையுடன் கவனித்தாலும் மனம் வருத்தமாகவே இருக்கும், அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் உருவாகும் பிரச்சனை இன்று மனதை பதட்டமாக்கும். உங்கள் பதட்டத்தில் சரி செய்ய அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை உதவியாக இருக்கும்.

வீட்டில் இன்று பொறுமை இழப்பதால் பல புதுவிதமான பிரச்சனை தோன்றும், பெற்றோரிடம் வாக்குவாதம் செய்வீர்கள். குடும்ப செலவு அதிகமாக இருக்கும். உடல்நலக் கோளாறு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களுக்கு இன்று சாதகமான நாளாக இருந்தாலும்,  மனம் தைரியமாக செயல்பட்டு இன்றைய தினத்தில் நடக்கும் நிகழ்வுகளை சமாளிக்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். குறிப்பிட்ட  வேலைகளை விரைவாக முடிக்க பல முயற்சிகள் எடுப்பீர்கள்.  

திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கும், வெளிப்படையான பேச்சு குடும்பத்தினரின் மனதைக் காயப்படுத்தும். காதல் பொறுமையாக இருப்பது அவசியமாகும். எதிர்பார்த்த நிதி நிலை கையில் இருக்காது. உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊடல்!  

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும், இன்பமான மனநிலை இருந்தால் இலக்கை அடையத் தெளிவான சிந்தனைகள் தோன்றும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். 

இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை, அதிகமான செலவுகள் இருக்கும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. சந்தோஷம்! 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற  ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்