Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Horoscope: மனக்குழப்பத்தால் என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 25, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 24, 2022 & 15:00 [IST]
Tamil Horoscope: மனக்குழப்பத்தால் என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 25, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10:30- 11:30 வரை

மாலை: 09:30- 10:30 வரை

Tamil Horoscope

மேஷம் (Aries 2022 Horoscope)

அறிவு ஆற்றலால் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு லட்சிய பாதையிலிருந்து நழுவாமல் பயணிக்கும் உங்களுக்கு இன்றைய நாள் மந்தமான நாளாக இருக்கும்,  தடைகள் சில இருக்கும். உங்கள் அறிவுக் கூர்மையால் தீர்வு காணுவது கடினமாகும்.  உங்கள் மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். தொழிலில் பணிச்சுமை அதிகமாக இருக்கும், சவாலான சூழ்நிலையை சமாளிக்க அதிகம் மன உறுதி தேவைப்படும். செல்வ நிலையில் பெரிய பாதிப்பு இல்லை, ஆனால் பணப்புழக்கம் இன்று கையில் அதிகமாக இருக்காது. வீட்டில் உள்ளவருக்கு மருத்துவ செலவு உருவாகும். குடும்பத்தில் சில சலசலப்புகள் இருக்கும். உங்களின் கல்வியில் பிரச்சனை இருக்காது. பொறுமை!     

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நட்பு உள்ளம் கொண்ட ரிஷப ராசிக்காரரே இன்று உங்களின் ராசியில் சாதகமான நிலை கொஞ்சம் குறைவாக இருக்கும், மனம் நிம்மதி இன்று சரியும். புதிய ஐடிக்களை தொழிலில் ஈடுபடுத்துவீர்கள், அமைதியான மனநிலையில் உழைத்தால் இன்று திருப்தி காண முடியும்.  சில எதிர்மறையான எண்ணங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும். வீட்டில் இன்பமாக இருப்பீர்கள், குடும்பத்தினரின் மனநிலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். கல்வி நிலை அமோகமாக உள்ளது. கையில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். உடல்நலத்தில் கால்வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மிதுன ராசிக்காரரே இன்று உங்களின் ராசிக்கு புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது, வேலைச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் மீது கோபப்படுவீர்கள், உங்களின் குழப்பமான மனநிலை தெளிவான முடிவெடுக்கத் தூண்டாது. நிதி நிலை சாதகமாக இல்லை, திடீரென செலவுகள் அதிகமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது, ஆரோக்கியமில்லாத உணவு முறை இன்று வயிற்று வலியைத் தரும். கல்வியில் நல்ல சூழல் இருக்கும், மாணவர்களுக்கு ஆர்வம் கூடும். வியாபாரம் கொஞ்சம் மந்தமாகும், லாபத்தைக் கூட்ட புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். விருத்தி!   

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

சாதனைகள் பல சாதித்தாலும் பணிவாக இருக்கும் உங்களுக்கு இன்று பணியிடத்தில் சக பணியாளரிடமிருந்து உதவி கிடைக்கும், இருப்பினும் எந்தவொரு காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும், கல்வி ஞானம் அதிகரிக்கும். உங்கள் மனதுக்குப் பிரியமானவர்களுடன் நல்லுறவில் இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  இதுவரை இருந்த பண நெருக்கடி தீர்ந்து செல்வ வரவு இருக்கும்.  வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை இருக்கும். திடமான மன நிலை இருந்தாலும் உடல் சோர்வாக இருக்கும். ஆதாயம்!  

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Leo 2022 Horoscope)

திடமான மனதுக்குச் சொந்தக்காரரான உங்களுக்கு இன்று மிகவும் சிறந்த நாளாகும்,  அலுவலகத்தில் வேலைகளை விரைந்து செய்வீர்கள், சக பணியாளரிடம்  இன்று உங்கள் செல்வ நிலை சீராக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் எண்ணம் தோன்றும். ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது, மனம் நிம்மதியாக உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். காதல் வாழ்க்கையில் இன்பமாக இருப்பீர்கள். வீட்டில் நிம்மதி சுழலும். மாணவர்களின் கல்விக்கு பிரச்சனை இல்லை. மகிழ்ச்சி!  

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

அயராது உழைக்கும் கடினமான குணத்தைக் கொண்ட உங்களுக்கு இன்று அதிகமான மன கவலைகள் இருக்கும், மனம் புத்துணர்ச்சி பெறத் தியானம் செய்தல் நல்ல பயன் அளிக்கும், உத்தியோகம் வளர்ச்சி கொள்ளும், மேலதிகாரிகளுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரம் இயல்பான நிலை இருக்கும். இன்று கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்வில் நெருக்கம் அதிகமாகும், புரிதல் ஏற்படும். காதல் வாழ்க்கை குறை கண்டுபிடித்து பிரச்சனையை உருவாக்குவீர்கள். இன்று கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


Representative Image. துலாம் - மீனம் அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் (25.06.22, சனிக்கிழமை) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யும். 


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்