Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Astrology in Tamil: பேரிழப்பை சந்திக்கப்போகும் அந்த ராசிக்காரர் இவரா! ஆனால் கடக ராசிக்கு எதிர்பார்க்காத நிலை தான்..... ஜுன்28,2022  ராசிபலன்! 

Manoj Krishnamoorthi June 27, 2022 & 13:45 [IST]
Today Astrology in Tamil: பேரிழப்பை சந்திக்கப்போகும் அந்த ராசிக்காரர் இவரா! ஆனால் கடக ராசிக்கு எதிர்பார்க்காத நிலை தான்..... ஜுன்28,2022  ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை 

மாலை: 04:45- 5:45 வரை 

Today Astrology in Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்று உங்களுக்கு தேவையில்லாத எண்ணங்கள் மன அமைதியைக் கெடுக்கும். பணிச்சுமை அதிகமாகும். வேலை நிமித்தமாகப் பயணம் மேற்கொள்ளுவீர்கள். இன்றைய தினம் உங்கள். காதல் வாழ்க்கையில் மந்தமாக இருக்கும்.  இன்று செலவுகள் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும், பண நெருக்கடி குறையும்.  வியாபாரம் அசௌகரியமாக இருக்கும், லாபத்தைப் பார்க்க அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்.. கல்வி நிலை நன்றாக உள்ளது, சந்தேகங்களைக் கேட்டு படிக்கும் ஆர்வம் தோன்றும். புதிய நட்பு கிடைக்கும், குடும்பத்தில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உடல் சோர்வாக இருக்கும்.  அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

புற அழகை விட அகத்தின் தெளிவே உண்மையான அழகு என்பதை உணர்ந்த  உங்களுக்கு இன்றைய நாள் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர், குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வாழ்வு முன்னேற்றப்பாதையில் நகரும், மாலை நேரத்தை ஆனந்தமாக நண்பர்களுடன் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய பிரச்சனைகள் உருவாகும், ஆனால் கணவன் மனைவி உறவுக்கு இடையில் நல்ல பிணைப்பு இருக்கும். இன்று செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, இன்று உணவு பழக்கத்தில் கவனம் தேவை.  நிம்மதி!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இளகிய மனதால் அனைவரையும் விரைவில் நம்பும் உங்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருந்தாலும், உருவாகும் செலவு கையில் பணப்புழக்கத்தைக் குறைக்கும். சமூகத்தின் மீது உள்ள ஆர்வம் உங்களைப் பொதுக்காரியத்தில் ஈடுபடுத்தும்.உங்கள் முயற்சி இன்று நல்ல முன்னேற்றம் அளிக்கும், தொழில் அசுர வளர்ச்சி கொள்ளும். உங்கள் மீது மதிப்பு உருவாகும், அலுவலகத்தில் அனைவரின் பாராட்டைப் பெறுவீர்கள்.  உடல் நலம் நன்றாக இருந்தாலும் சற்று சோர்வாக உணர்வீர்கள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்களின் கலை ஆர்வம் இன்று  அதிகமாகச் செல்வாக்கு பெறும், பணிச்சுமையில் இருக்கும் சுமை சற்று கடினமாக இருந்தாலும், அதை சமாளிக்கும் மன நிலை இருக்கும். இன்று பழைய நண்பர்களைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவீர். நிதி வளர்ச்சி ஓரளவு சீராக இருக்கும், அதிகமான செலவு இருக்கும். முக்கியமான பணப் பரிவர்த்தனையில் அதிகமான கவனம் வேண்டும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக  இருக்கும். காதல் வாழ்க்கையில் நல்லிணக்கத்துடன் சிறப்பான புரிதல் இருக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Leo 2022 Horoscope)

இக்கட்டான சூழ்நிலையில் உதவியோருக்கு இறுதி மூச்சுவரை விஸ்வாசமாக இருக்கும்  உங்களுக்கு  இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள்  நகைச்சுவை உணர்வால் அனைவரையும் மகிழ்ச்சி செய்து பிறர் சந்தோஷத்தில் மன நிம்மதி காண்பீர்கள்.  இன்று அதிக நேரத்தை சிறப்பாக அலுவலகத்தில் செலவிடுவீர்கள். நிதி நிலை நன்றாக உள்ளது, உங்களின் சரியான திட்டமிடல் இன்று செல்வ நிலையில் லாபமாக மாற்றும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட கன்னி இராசி வாசகரான உங்களுக்கு இன்றைய தினம் நிதி நிலைமையில் செலவுகள் மட்டும்தான் இருக்கும்.  இன்று  ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதால் முடிக்காத வேலைகளைச் செய்வீர்கள். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நல்ல பண வரவு உண்டு. காதல் வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு மூலம் வாக்குவாதம் உருவாகும்.  ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் மனம் பதட்டமான நிலையில் இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6


துலாம்- மீனம் வரை தினசரி பலன் (28.06Representative Image. .2022, செவ்வாய்) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிடசெய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்