Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையற்ற வாக்கு வாதத்தை குறைப்பது நல்லது...இல்லைனா கஷ்டம் | Aani Matha Rasi Palan 2023 Kanni in Tamil

Priyanka Hochumin Updated:
தேவையற்ற வாக்கு வாதத்தை குறைப்பது நல்லது...இல்லைனா கஷ்டம் | Aani Matha Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 கன்னி:

கன்னி ராசியினர் வம்பு வழக்குக்களில் சாதகமான தீர்ப்புகள் அமையும். விவாகரத்து சம்மந்தமாக தள்ளி போகும் வழக்குகளும் முடிவுக்கு வரும். மூத்த சகோதர/சகோதரிகளுக்கு சொத்து காரணமாக பிரச்சனை இருந்தால் படிப்படியாக குறையும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அமையும். வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டால் கூடிய விரைவில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதில் இருந்து மீண்டு வருவீர்கள்.

சுய தொழில் அல்லது வேலை செய்யும் இடத்தில் நேர்முக, மறைமுக எதிரிகள் இருந்தால் அவர்களை தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். தந்தையிடத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே, கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையுடன் இருக்க வேண்டும். அரசு வேளையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழும் அமோகமான மாதமாக இருக்கும். தாயாருக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் வரலாம் கவனமாக இருக்க வேண்டும். புது கார் அல்லது பைக் வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் தகுதிக்கு ஏற்ப வீடு கட்டுமான பணிகளை இந்த ஆனி மாதத்தில் தொடங்கலாம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல நல்ல வரன் அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்