Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும்.. அதிர்ஷ்ட காற்று உங்க பக்கம் வீசப்போகுது.. | Aani Matha Rasi Palan 2023 Simmam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும்.. அதிர்ஷ்ட காற்று உங்க பக்கம் வீசப்போகுது.. | Aani Matha Rasi Palan 2023 Simmam in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் புதன் பகவான் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 சிம்மம்:

ஆனி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் சிம்ம ராசியினருக்கு எந்தவொரு தோஷங்களும் இல்லாத நிலை ஏற்படும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்யும் தொழிலில் புது வாடிக்கையாளர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கீழ்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த வந்த பணிச்சுமை குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். இருப்பினும், தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சிலருக்கு வெளியூர், வெளி மாநிலம் வாயிலாக நல்ல செய்தி வந்து சேரும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தப்படி நடந்து முடியும். எதிர்பாராத பணவரவுகள் நெருக்கடிகளை குறைக்கும். பழைய முதலீடுகள் எதிர்பாராத லாபத்தை தரும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்