Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மனப்பூர்வமான சந்தோஷம் நிச்சயம் உண்டு.. குறிப்பா அந்த விஷயம் நடக்கும்.. | Aani Matha Rasi Palan 2023 Kumbam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மனப்பூர்வமான சந்தோஷம் நிச்சயம் உண்டு.. குறிப்பா அந்த விஷயம் நடக்கும்.. | Aani Matha Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் புதன் பகவான் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் கும்ப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 கும்பம்:

ஆனி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் கும்ப ராசியினருக்கு சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. அதேபோல், நண்பர்கள் அல்லது உறவினர் வழியில் இனிமையான மகிழ்ச்சியான நற்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். காதலர்களுக்கு இடையில் இருந்த கருத்து மோதல்கள் நீங்கி அன்பு மேம்படும். சிலருக்கு தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். நீண்ட நாட்களாக குழந்தை வரனுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. அதுவும் இரட்டை குழந்தையாக உருவாகமும் வாய்ப்புள்ளது. சின்ன சின்ன தடைகளுக்குப் பிறகு பிடித்த காரியம் நிறைவேறும். 

எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலக்கட்டம். பணியிடத்தில் மேலிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சிலருக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய காலக்கட்டம். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பிரயாணங்களால் அனுகூலம் ஏற்படும். இருப்பினும், உங்க ராசிக்கு 7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் கேது நட்சத்தில் அமர்ந்திருப்பதால், வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. அதேபோல், பழைய விஷயங்களால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை வரலாம். முடிந்தவரை நீங்க அனுசரித்து செல்வது நல்லது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்