Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாயை திறந்தாலே பிரச்சனையில் தான் முடியும்.. | Aani Matha Rasi Palan 2023 Viruchigam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வாயை திறந்தாலே பிரச்சனையில் தான் முடியும்.. | Aani Matha Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் புதன் பகவான் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

ஆனி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினருக்கு பெயர் தெரியாத அல்லது எதிரிகளால் அடிக்கடி பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். இருப்பினும் அவற்றையெல்லாம் உங்க மதிநுட்பத்தால் வென்றுவிடுவீர்கள். நண்பர்களுக்கு உள்ளேயே எதிரி இருப்பார்கள் அவர்களை கண்டுபிடுத்து விடுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தைவிட நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், எழுத்து துறை மற்றும் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு அதிகளவு வேலை பளு இருக்கும். அதாவது, அடுத்தவரின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

ஒரு சிலருக்கு வேலையே வேண்டாம் சாமி என்று சொல்லும் அளவிற்கு உயர்அதிகாரிகளின் தொல்லை இருக்கும். இருப்பினும், உங்க திறமையால் அனைத்தையும் சமாளித்து பாராட்டு பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி அபிரிவிதமாக இருந்தாலும் சண்டை சச்சரவுகளும் இருக்கும். சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். எரிச்சலூட்டும் விதமாக குடும்பத்தில் உறவினர்களால் பிரச்சனை ஏற்படும். வார்த்தையில் கவனமாக இருங்கள். தம்பதிகள் ஈகோ குணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்