Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Entha Naal Enna Vanga Vendum In Tamil : எந்த கிழமையில் என்ன செய்தால் நன்மை.... அப்போது இது வாங்கலாமா..?

Manoj Krishnamoorthi August 04, 2022 & 17:00 [IST]
Entha Naal Enna Vanga Vendum In Tamil : எந்த கிழமையில் என்ன செய்தால் நன்மை.... அப்போது இது வாங்கலாமா..?Representative Image.

நம் முன்னோர்கள் நமக்கு ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்கள் வாங்கவும், ஒவ்வொரு செயலும் செய்ய உகந்த தினமென குறிப்பிட்டனர். ஆனால் இன்று நாம் அதை மறந்துவிட்டோம் அதை ஞாபகம் செய்யும் வண்ணம் இந்த பதிவு இருக்கும்.

ஞாயிறு (Sunday Enna Vanga Vendum In Tamil)

வாரத்தின் முதல் நாளான இந்த தினம் சூரியனைக் குறிக்கும், சூரியன் என்பது கிரகத்தின் மையமாகும். இந்த தினத்தில் பெற்றோருக்கு பரிசளிக்க உகந்ததாகும்.  அரசாங்கம் சார்ந்த செயல்களான கடிதம், ஆவணங்கள் வாங்குவது, கையெழுத்திடுவது சிறப்பாகும். ஆன்மீக செயல்கள் கும்பாபிஷேகம் போன்ற சுபகாரியம், திருமணங்கள்  செய்யலாம். அறுவை சிகிச்சை செய்ய ஞாயிற்றுக்கிழமை உகந்த தினமாகும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கக் கூடாது.  

திங்கள் (Monday Enna Vanga Vendum In Tamil)

சந்திரனைக் குறிக்கும் திங்கட்கிழமை பிராயனாம் செய்ய சிறந்த நாளாகும், இருப்பினும் புதிய முடிவுகளைத் திங்கட்கிழமை தினத்தன்று எடுப்பது உகந்ததாகாது. தங்கம் அல்லது வெள்ளி வாங்கலாம் ஆனால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கக்கூடாது. நிலையாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் வாங்கும் நிலம், வீடு போன்றவை வாங்குவது உகந்ததாகாது.

செவ்வாய் (Tuesday Enna Vanga Vendum In Tamil )

செவ்வாய்க்கிழமை மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மிகவும் சிறந்த நாளாகும்.  இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கலாம். வீடு மனை வாங்கலாம், வீட்டுக்கு மற்றும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது நன்மையாகும். வயல்கள் அல்லது சொத்துகள் வாங்கலாம். பொதுவாகத் திருமணம் போன்ற விஷயங்கள் செவ்வாய் தினத்தன்று செய்யப்படாது.  

புதன் (Wednesday Enna Vanga Vendum In Tamil)

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது நாம் அறிந்த ஒன்றாகும், கல்வி சம்பந்தமான பொருட்கள் வாங்கலாம் அல்லது தானம் அளிக்க சிறந்த நாளாகும்.  புதிய பொருட்கள் வாங்க, புதிய திட்டம் வகுக்க புதன் சிறந்த நாளாகும். பயணம் செய்யலாம். கலை சார்ந்த பொருட்கள் வாங்க  மற்றும் கலை பணிகள்  தொடங்க சிறந்த நாளாகும்.

வியாழன் (Thursday Enna Vanga Vendum In Tamil)

வியாழன் அன்று ஜாதகம் ரீதியான செயல்கள் செய்யலாம். புதிய கலைகள் கற்க , தியானம் மண்டபம் தொடங்க, குரு தட்சணை அளிக்க சிறந்த நாளாகும். 

வெள்ளி (Friday Enna Vanga Vendum In Tamil )

மங்களகரமான வெள்ளிக்கிழமை சுக்கிரனைக் குறிக்கும் இந்த நாள் சுப நிகழ்ச்சியான திருமணம் செய்யலாம். கோயில்கள் செல்ல உகந்த தினமாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க, தங்கத்தை விட வெள்ளி வாங்குவது சிறப்பாகும். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். வெள்ளிக்கிழமை அன்று செலவைக் குறைத்து கொள்வது நன்மை ஆகும். முக்கியமாக வெள்ளிக்கிழமை தினத்தன்று மாலை வேளைகளுள் வெளியே தங்காமல் வீடு திரும்ப வேண்டும்.   

சனி (Saturday Enna Vanga Vendum In Tamil )

கர்ம வினை தீர்க்கும் சனிபகவானைக் குறிக்கும் இந்த தினத்தில் வழக்கு சார்ந்த செயல்கள் பதிவு செய்யலாம், தீர்வு காண  நினைக்கும் காரியத்தை சனிக்கிழமை அன்று செய்யலாம்.  இரும்பு, இரும்பு சார்ந்த பொருட்கள் வாங்கலாம். சிகிச்சை செய்வது சாதகமாகாது. வயல்கள் புதியதாக வாங்க வேண்டாம்.

பரிகாரம்

ஒருசில நாட்கள் மேலே குறிப்பிட்டுள்ள  செய்யக் கூடாத செயல்களை செய்ய வேண்டியதாக இருக்கும் அந்த சமயம் வருத்தம் வேண்டாம் விநாயகப் பெருமானை மனதில் நினைத்து இந்த மந்திரத்தைக் கூற வேண்டும். 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Entha Naal Enna Vanga Vendum In Tamil | Entha Naal Enna Seiya Vendum In Tamil | Entha Naal Enna Vanga Kudathu | Best Day To Buy Gold In Week | Entha Naal Enna Vanga Kudathu Vendum | Entha Naal Enna Seiya Vendum | புதன்கிழமை செய்ய கூடாதவை | வியாழன் கிழமை செய்ய கூடாதவை | வெள்ளிக்கிழமை செய்ய கூடாதவை |  சனிக்கிழமை செய்ய கூடாதவை | Monday Enna Vanga Vendum In Tamil | Tuesday Enna Vanga Vendum In Tamil | Wednesday Enna Vanga Vendum In Tamil | Thursday Enna Vanga Vendum In Tamil | Friday Enna Vanga Vendum In Tamil | Saturday Enna Vanga Vendum In Tamil |  Monday Enna Seiya Vendum | Monday Enna Seiya Vendum In Tamil |   Best Things To Buy Each Day | Entha Naal Enna Vanga Vendum | Best Day To Buy Bike | Best Things To Buy Daily In Tamil | Best Things To Buy Daily | Tuesday Enna Seiya Vendum In Tamil | Wednesday Enna Seiya Vendum In Tamil | Best Day To Buy Things In Week


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை