Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aadi Perukku Valipadu Murai: ஆடி பெருக்கு வழிபாடு முறை, தாலி கயிறு மாற்றும் நேரம்…

Nandhinipriya Ganeshan July 05, 2023 & 13:05 [IST]
Aadi Perukku Valipadu Murai: ஆடி பெருக்கு வழிபாடு முறை, தாலி கயிறு மாற்றும் நேரம்…Representative Image.

Aadi 18 Worship Method in Tamil: ஆடி மாதத்தில் மிகவும் விஷேசமான நாள் ஆடிப் பெருக்கு, அதை ஆடி 18 என்று அழைப்போம். உலகம் இயங்க காரணமாக விளங்கும் நீரை வழிபடுவதே இந்த அற்புதமான நாளின் சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும் என்ற சிறப்பிற்கு உரியது இந்த ஆடி 18. நாம் பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு தான் புத்தாடை அணிவோம். ஆனால், உண்மையில் நம் முன்னோர்கள் ஆடி பெருக்கிற்கு தான் புத்தாடை அணிந்து வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த நன்னாளில் தான் விவசாயத்திற்கு பொருட்கள் வாங்குவது, குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வது, கல்யாணமான பெண்களுக்கு சீர்வரிசை செய்வது, சுமங்கலிகள் தங்களது தாலி கயிற்றை மாற்றுவது என்று அத்துனை மங்களகரமான நிகழ்வுகளை செய்வார்கள்.

ஆடி பதினெட்டு அன்னைக்கு கட்டாயம் வாங்க வேண்டிய ஒரு பொருள்…

இத்தனை சிறப்பிற்கு உரிய ஆடி பெருக்கானது இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. நம்முடைய வீட்டில் எப்படி இந்த ஆடிப் பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். நம்முடைய வீட்டில் காவிரி அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தண்ணீரை பயன்படுத்திக் கூடிய அதற்கு மூலக்காரணமாக இருக்கக் கூடிய கிணறு இருந்தால், அதன் அருகில் வழிபாடு செய்யலாம். அப்படி கிணறு இல்லையென்றால், வீட்டின் பூஜை அறையிலேயே வழிபாடு செய்து கொள்ளலாம்.

வழிபாடு முறை:

ஒரு பாத்திரத்தில் (சொம்பு) சுத்தமான தண்ணீரை எடுத்து, அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 பூக்களை (எந்த பூவாகவும் இருக்கலாம்) போட்டுக் கொண்டு, அதை காவிரியாக பாவித்துக் கொண்டு தீர்த்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட இப்படி ஒரு காரணமா….!

நெய்வேதிய பொருளாக காதோழ கருகமணி, 1 எலுமிச்சை பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் உடைக்கும் வழக்கம் இருப்பவர்கள் இரண்டு தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, காப்பரிசி மிகவும் முக்கியமான ஒரு நெய்வேதிய பொருள். எனவே அதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

நாக பஞ்சமி ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி..

குறிப்பாக, இன்றைய பூஜையில் நாவல்பழம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், கொய்யா, மாதுளை, சாத்துக்கொடி போன்ற பழங்களை 3 அல்லது 5 எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக, புதிய தாலி கயிறு ஒன்றை எடுத்து மஞ்சள் பூசி உங்களுடைய தாலியில் இருக்கக் கூடிய அனைத்துப் பொருட்களை அதில் கோர்த்து, வெற்றிலை பாக்கு மேலே வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய மாங்கல்யத்தை கழுட்டுவதற்கு முன்பாக வெறும் மஞ்சள் கயிறை மட்டும் கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபி ‘ஆடி தேங்காய் பால்’ செய்வது எப்படி?

குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய பிராத்தனைகளை மனதில் நினைத்து வணங்க வேண்டும். தீபாராதனை எல்லாம் முடிந்த பிறகு அந்த திருமாங்கல்யத்தை கணவரிடம் கொடுத்து அவரை கட்டிவிட சொல்லலாம். கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றால் மாமியார், அம்மா கையாலையோ அல்லது நீங்களே கூட கட்டிக் கொள்ளலாம்.

வழிபாடு செய்து தாலி கயிறு மாற்றும் நேரம்:

காலை 10.45 மணி முதல் மதியம் 01.15 மணி வரை

இந்த நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

மதியத்திற்கு பிறகு வழிபாடு வேண்டுமானால் செய்துக் கொள்ளலாம், ஆனால் தாலி மாற்றக்கூடாது.

மாதவிடாய் காலத்தில் தாலி கயிறு மாற்றலாமா?

ஆடிப்பெருக்கு நாள் அன்று மாதவிடாய் காலமாக இருந்தால், பூஜை அறைக்கு வெளியில் இருந்து தாலி மாற்றிக்கொள்ளலாம். எந்த பிரச்சனையும் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்