Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Rasipalan: இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் பாராட்டு மற்றவர்களுக்கு கசக்க தான் செய்யும்.. ஜூலை 22, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi July 21, 2022 & 14:00 [IST]
Indraya Rasipalan: இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் பாராட்டு மற்றவர்களுக்கு கசக்க தான் செய்யும்.. ஜூலை 22, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 12:15- 1:15 வரை

மாலை: 6:30- 7:30 வரை

Indraya Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (22.07.2022) தினத்தில் ஒவ்வொரு ராசியும் அடையப்போகும் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,   

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (22.07.2022, வெள்ளி)

துலாம் (Libra 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் வாழ்வின் முக்கியமான நாளாக அமையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக அமையும். புதிய மனிதரின் மூலம் எதிர்பார்க்காத நல்ல தகவல் வரும். தொழிலில் மும்முரமாக வேலை செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும், சேமிக்க சரியான தருணமாகும்.

உங்கள் நகைச்சுவையான நடத்தை வீட்டில் சந்தோஷமாக்கும், கணவன் மனைவி உறவு ஆனந்தமாக இருக்கும். பொழுத்துபோக்கு அம்சங்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.  நற்செய்தி!  

அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று நீங்கள் அயராது ஓடும் நிலை உருவாகும், உங்கள் தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் அதிகமாகும். சந்தை படுத்தல் தொழிலில் இருக்கும் விருச்சிக ராசிக்காரருக்கு இன்று வெற்றி பெறுவதற்குள் ஒரு வழி ஆகிவிடுவீர்கள். திருப்திகரமான நிதி நிலை உண்டு.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். போட்டி தேர்வு தயாராகும் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நலமான உடல்நலம் இருக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

நீங்கள் பொறுமையாக இருப்பதால் பல நற்செயல்கள் உங்களுக்கு நிகழும், மனம் ஒரு நிலையில் இருக்காது சிறிய குழப்பம் ஏற்படும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை வாழ்க்கையை புரிய வைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சற்று தாமதமாக பலன் அளிக்கும், மனம் தளர வேண்டாம். கையில் இன்று பணப் புழக்கம் பெரியதாக இருக்காது.

வீட்டில் நிம்மதி இருக்கும், காதல் வாழ்க்கையில் உங்கள் இனிமையான பேச்சு சந்தோஷத்தை அதிகமாக்கும்.  ஆரோக்கியத்தில் சற்று கவனம் காட்ட வேண்டும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Capricorn 2022 Horoscope)

பல நாட்களாக மனதில் அரித்து கொண்ட பிரச்சனைக்கு இன்று ஒரு தீர்வு பிறக்கும், உங்கள் அறிவு கூர்மைக்கு ஏற்ற நல்ல வெகுமதி கிடைக்கும். தொழிலில் உங்கள் செயலாற்றல் நல்ல் பலன் அளிக்கும், உங்கள் திட்டத்தை வெற்றியாக்கி காட்டுவீர்கள். இன்று செலவுகள் அதிகமாகும். 

வீட்டில் உங்களின் உணர்ச்சிவசம் கவலை அளிக்கும், ஆனால் குடும்பத்தினரை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் அறிவுரை தேவைப்படும்.  ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.  தொழில்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாகும், தொழிலில் கிடைக்கும் வெற்றி அசுர வளர்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் உங்களைத் தேடி வாய்ப்புகள் வரும் , அதை உபயோகித்து கொண்டால் நிச்சியம் மாற்றம் பெறலாம். சிறந்த பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் உடல்வலி பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும் மேலும் சுற்றத்தார் மத்தியில் உங்கள் பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை சக பணியாளரின் ஒத்துழைப்புடன் சாதகமாக முடிப்பீர்கள். போதுமான பண வரவு கையில் இருக்கும். 

வீட்டில் அன்பு அதிகரிக்கும், உங்களின் நடவடிக்கை குடும்பத்தில் சந்தோஷம் அளிக்கும். உடற்பயிற்சி ஆர்வம் தோன்றும். உடல்நலக் குறைகள் குறையும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்