Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாளுக்கான [01 மே 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

இன்றைய தினம் அதிர்ஷ்டங்கள் கூடி வரும் தினம். கஷ்டமான காரியத்திலும் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எல்லா வகையான துன்பங்களும் விலகி நன்மைகள் உண்டாகும். உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வைத்து வெற்றி காண்பீர்கள். தெளிவான ஆலோசனை நல்ல முடிவைத் தரும். மனதில் புதுவிதமான இலக்குகள் உண்டாகும். அதை அடைவதற்கான வழியைத் தேடுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தது அனைத்தும் நடக்கும். உங்கள் நெருக்கமானவர்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அதிக கவனம் தேவை. தந்தையின் உடல்நலத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். பொழுதுபோக்குத் தொடர்பான விஷயத்தில் விரயங்கள் ஏற்படலாம். கவனமுடன் கையாள வேண்டும். பணியிடத்தில் கவனமாக செயல்படுவது சிறப்பு. உடல் நலத்தில் சிறந்த கவனம் தேவை. அதிக செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

இதுவரை இருந்து வந்த இழுபறியான பணிகள் அனைத்தும் விரைவில் முடிவு பெறும். உடன் பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். புது விஷயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவது நல்லது. வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றுவீர்கள். பணி, உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆசிர்வாதம் பெற்று காரியத்தை தொடங்குவது சிறப்பைத் தரும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கால்நடைகளின் மூலம் ஆதாயத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குதல் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். இதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மேம்பாடு அடைவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி நல்ல சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படும். இருப்பினும், கவனத்துடன் செயல்படுவது நல்லது. எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீங்கள் எடுக்கும் புதிய முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை ஏற்படலாம். கவனமுடன் இருப்பது நல்லது. மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படலாம். கவனமுடன் இருப்பது நல்லது. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத சில பயணங்களால் வரவு ஏற்படலாம். அலைச்சல்கள் ஏற்படலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார மேம்பாடு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேள்வி பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் பொறுப்பு அதிகரிக்கும். புது நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி விடும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி புரிதல் மேம்படும். பணியிடத்தில் உங்களின் திறமைகளால் கஷ்டமான பிரச்சனைகளையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இன்று விருச்சிக ராசி நேயர்கள் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் உண்டாகும். இதனால், மகிழ்ச்சி பெருகும். புது நண்பர்களின் வருகையால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே இருந்த பிரச்சனைகள் விலகும். பணி தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசுப் பணிகளில் இருந்து வந்த தாமதம் விலகி விடும். மனதில் ஏற்படும் மாற்றங்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவியிடையே பிரச்சனைகள் விலகி அன்பு அதிகரிக்கும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பணியிடத்தில் உங்கள் பெயர், புகழ் மேம்படும். மாணவர்கள் புதிய முயற்சியில் சாதனை படைப்பார்கள். தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளை அறிவீர்கள். புத்திசாலியுடன் செயல்பட்டு வருமானம் ஈட்டும் நாள். வெளிவட்டாரத்தில் சிந்தித்து செயல்படுவது  சிறந்தது. அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று கவனத்துடன் செயல்படுவதன் மூலம் ஆதாயம் பெறலாம். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள். மற்றவர்களைப் பரிந்துரை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படலாம். மனதில் குழப்பம் ஏற்படலாம். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்வது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் நன்மை உண்டாகும். சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள். தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டால் பிரச்சனைகள் குறையும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உறவினர்கள் வழி மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்படலாம். சிக்கனத்துடன் செயல்படுவது சிறந்தது. விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புண்டு. பணி காரணமாக அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. பணியில் பொறுப்புடன் செயல்படுவது சிறப்பு. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும்.. ஆனா இதுல கவனமா இருக்கணும்..! | 01.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பொருளாதாரம் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். எதிர்பார்க்காத சில உதவிகள் நன்மையைத் தரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நன்மையான சூழல் உண்டாகும். அனுபவமிக்க வேலை ஆட்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். சில எதிர்ப்புகள் மறைந்து நன்மை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை . எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்