Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

விருச்சிகம் ராசி ஜூலை மாத ராசிபலன் 2023.. | July Month Rasi Palan 2023 Viruchigam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
விருச்சிகம் ராசி ஜூலை மாத ராசிபலன் 2023.. | July Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image.

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூலை மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

உங்க ராசிக்கு ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் சேர்க்கை மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த காலத்தில் நிறைய புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். நிறைய மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு கடல்கடந்த பிரயாணங்கள் ஏற்படும். குறிப்பாக, உங்க குலதெய்வத்தின் அனுகிரகம் முழுமையாக இருப்பதால் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து முடியும். வண்டி, வாகனம் யோகம் உண்டு. மேலும், தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

கலை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு அமோகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் மற்றும் கௌரவம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுவாக, விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதுமே வேலை வேலை என்று அனைத்து நேரத்தையும் அதிலேயே செலவு செய்வீர்கள். எதிர்காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் எப்போது ஒரு சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அது இந்த மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். எத்தனை போட்டிகள் இருந்தாலும் கடைசியில் வெற்றி என்பது உங்களுக்கே.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்