Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மீனம் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
மீனம் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் மீன ராசி மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூலை மாத ராசிபலன் 2023 மீனம்:

ஜூலை மாதம் உங்களுக்கு மன நிம்மதி மிக்க மாதமாக இருக்கும். மனதில் தெளிவான சிந்தனைகளுடன் இருப்பீர்கள். பிள்ளைகளால் ஏராளமான மகிழ்ச்சி மற்றும் புகழ் கிடைக்கும். தொழிலில் நல்ல மேன்மை அடையும் வாய்ப்புகள் அமையும். உணவு எடுத்துக் கொள்வதில்லை கட்டுப்பாடு வேண்டும். உடலில் பிரச்சனை இருந்தால் அது நீங்கும். ஆடம்பர தொழில் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். தொழிலாளிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

கலைத் துறையில் இருப்பவர்களுக்கு யோகம் நிறைந்த மாதமாக இருக்கும். பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அளவில்லாத வெற்றி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவி இருவரும் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். ஈகோ அதிகரித்தால் வர வேண்டிய நன்மை எதுவும் வராத. ஆகையால், அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்