Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

July Month Rasipalan: இந்த மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு செல்வம், கல்வி எல்லாம் டாப் தான்…ஆனால் வீட்டில்…….

Manoj Krishnamoorthi June 27, 2022 & 19:00 [IST]
July Month Rasipalan: இந்த மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு செல்வம், கல்வி எல்லாம் டாப் தான்…ஆனால் வீட்டில்…….Representative Image.

நம் மானுட வாழ்வில் நமக்கு பல எண்ணங்கள் இருக்கும், ஆனால் அவையாவும் நிஜத்தில் சாத்தியமில்லை நம் ஜாதகத்தில் நடக்கும் கிரக நிலை மாற்றத்தால் நம் வாழ்வில்  மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, இவ்வாசகத்தில் மேஷம் முதல் கடகம் வரை  முதல் 3 ராசிகளின் ஜூலை மாதம் அடையும் பலன் (July Month Rasipalan) பற்றி அறிய இவ்வாசகத்தைத் தொடர்ந்து படிக்கவும். 

மேஷம்

பொது பலன்:  உங்கள் ராசியில் 10 ஆம் வீட்டில் சனி பகவான் இருப்பது கடுமையாக உழைக்க சக்தி அளிக்கும், ஆனால் உழைப்புக்கு ஏற்ற பயனைப் பெறுவது அரியதாகும். கல்வி நிலை நன்றாக உள்ளது. பேசும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் செல்வம் இன்ப செலவாக முற்று பெறும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிறு பதட்டம் வரும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். 

அஸ்வினி:  வீட்டில் பொறுமை காக்க வேண்டும்.

பரணி: நீண்ட நாட்களாகத் தேடிய பொருட்கள் கிடைக்கும்.

கிருத்திகை: நல்ல தகவல் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுகிழமை அன்று பைரவருக்கு பால் அளிக்க வேண்டும்.  நாய்களுக்கு உணவளிக்க வேண்டும்.

ரிஷபம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த மாதம் நன்றாக உள்ளது, தொழில் ரீதியாகப் பல நன்மைகள் நிகழும். உங்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும், முன்னேற்றப் பாதையில் நகர நம்பிக்கை அளிக்கும். வளமான செல்வ நிலை இருக்கும். 

இதுவரை குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் யாவும் மறைந்து மகிழ்ச்சியான நிலை இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. கல்வி நிலை மிகவும் அருமையாக உள்ளது. சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும் சுழல் அதிகமாக உள்ளது. உங்கள் ஆறாவது வீட்டில் கேது மற்றும் செவ்வாய் பார்வை இருப்பதால் உடல்நலக் கோளாறு இருக்கும். 

கிருத்திகை: தொழில் நல்ல வளர்ச்சி கொள்ளும், நண்பர்களை சரியாகத் தேர்ந்தெடுப்பீர்கள்.

மிருக ஸீரிஷம்: மனம் நிம்மதியாக இருக்கும்.

ரோகிணி: பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் கணேச வழிபாடு செய்து வெள்ளை நிற ஆடை அணிதல் வேண்டும்.

மிதுனம்

பொது பலன்: மிகவும் நல்ல தொழில் வளர்ச்சி இந்த மாதம் உங்களுக்கு இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவருக்கு பல நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், மதிப்பும் மரியாதையும் நன்றாக உயரும். மிதமான நிதி நிலை இருக்கும், செலவுகள் அதிகமாக இருந்தாலும் பெரிய தொகையைப் பெறுவீர்கள்.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது, கணவன் மனைவி உறவில் நல்லிணக்கமாக நடந்து கொள்ளுவீர்கள். காதல் விஷயங்களில் வரும் பிரச்சனைகளை சாதாரணமாகக் கையாளுவீர்கள். உயர்கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த  கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். மருத்துவ செலவு கண்டிப்பாக வரும். உடலில் வயிறு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வரும், சரியான தூக்கம் அவசியமாகும். 

மிருகசீரிஷம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவாதிரை:  விடாமுயற்சி எண்ணிய காரியத்தை நடத்தும்.

புனர் பூசம்: மாற்றங்கள் பல நடக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பசு மாட்டுக்கு உணவளியுங்கள்.

கடகம்

பொது பலன்:  உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் குரு வக்கிரமாக இருப்பது முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டும். தொழில் இயல்பு நிலையில் உள்ளது, சுமுகமான நிலைமை சுழலும். வியாபாரத்தை புதியதாக விரிவுபடுத்தும் யோகம் இந்த மாதம் கடக ராசிக்காரருக்கு உண்டு. பெரிய முதலீடு செய்ய சரியான நேரமாக இந்த மாதம் அமையும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், திருமண பந்தத்தில் நட்பான அணுகுமுறை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

புனர் பூசம்: நலமான குடும்ப வாழ்க்கை உள்ளது.

பூசம்: ஆரோக்கியத்தில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

ஆயில்யம்: புதிய மனிதர்களின் மூலம் தொழில் வளர்ச்சி இருக்கும்.

பரிகாரம்:  சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது நன்மை அளிக்கும். காளை மாட்டுக்கு வெல்லம் அளிக்க வேண்டும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்