Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan: இந்த வாரம் வியாபாரத்தில் அசுர வளர்ச்சி கண்டு..... வேறலெவலில் வாழப்போகும் அதிர்ஷ்ட்கார ராசிக்காரர் நீங்களா..... ஜூன் மாதம் இறுதி வார ராசிபலன்..! 

Manoj Krishnamoorthi June 25, 2022 & 17:00 [IST]
Next Week Rasi Palan: இந்த வாரம் வியாபாரத்தில் அசுர வளர்ச்சி கண்டு..... வேறலெவலில் வாழப்போகும் அதிர்ஷ்ட்கார ராசிக்காரர் நீங்களா..... ஜூன் மாதம் இறுதி வார ராசிபலன்..! Representative Image.

ஜோதிடத்தைப் பொருத்தவரை கிரக நிலை மாற்றமே ராசிகளின் நிலையை மாற்றும், அந்த கிரக நிலையை மையப்படுத்தி ராசிகளின் பலன் அமையும்.  சுபகிருது வருடம் ஆனி மாதம் 12 ஆம் நாள் முதல் ஆனி 18 ஆம் நாள் வரை(26.06.22- 02.07.22) துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்கு என்ன மாதிரியான பலன் என்பதை அறிய இவ்வாசகத்தைப் பின்தொடரவும். 


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் இந்த வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


துலாம்

பொது பலன்:  உங்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கும் வாரமாக அமையும். தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுவீர்கள். செல்வ வரவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் இருக்காது, மனதில் பதட்டம் அதிகமாக இருக்கும். 

குடும்ப  வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உறவினர் மத்தியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனை உருவாகும். 

சித்திரை: பிறரின் பிரச்சனை உங்கள் உடல்நலத்தைக் கெடுக்கும்.

சுவாதி:  ஆரோக்கிய கோளாறு வரும். 

விசாகம்: குடும்ப செலவு இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அகன்று நிம்மதியான வாழ்வைப் பெற வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை படைத்து வணங்க வேண்டும்.

விருச்சிகம்

பொது பலன்:  இந்த வாரம் உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும்  தருணமாக அமையும்.  புதிய நட்பு கிடைக்கும். புதிய தொழில் அமையும். உத்தியோகஸ்தர்களின் நிலை நன்றாக உள்ளது, மதிப்பும் மரியாதையும் கூடும். பல நாள் பிரச்சனைகள் எளியதாக முற்று பெறும்.

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, சுபகாரியம் நடக்கும் வாய்ப்பு அதிகமாகும். திருமண வாழ்க்கை அமோகமாக உள்ளது. செல்வ நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. நட்பு வட்டாரத்தின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை.

விசாகம்: சுப நிகழ்ச்சி கூடும்.

கேட்டை:  நண்பர்களின் உதவி முன்னேற்றம் அளிக்கும், தொழில் சிரக்கும்.

அனுஷம்: இந்த வாரம் பிரம்மாண்டமான வாரமாக தோன்றும், உங்கள் சிந்தனை மிகப்பெரிய சாதனையாக முடியும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால்

பரிகாரம்: தினமும் திருமாலை வழிபாடு செய்து அன்றாட வேலையைத் தொடங்கலாம்.

தனுசு

பொது பலன்:  இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும், உறுதியான மனநிலை இருக்கும். உங்களின் கோபத்தை உழைப்பாக மாற்றி முன்னேற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் மிதமான வளர்ச்சி இருக்கும். நிதி நிலையில் சில கடன் வாங்கும் சூழல் உருவாகும். 

வீட்டில் இன்பமாக இருப்பீர்கள். திருமண பந்தத்தில் அன்பான நடவடிக்கையால் துணையைக் கவர்வீர்கள். உடல்நலத்தில் பெரியதாக பிரச்சனை ஏதுமில்லை.

மூலம்: தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளது, உங்களின் மனம் வெற்றியை உணரும். 

பூராடம்: இதுவரை இருந்த சங்கடங்கள் அகலும். மனம் உறுதியுடன் இருப்பீர்கள்.

உத்திராடம்: திடமான மன உறுதியால் பணியில் வளர்ச்சி பெறுவீர்கள்.  

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்: ஸ்ரீ ராம பிரானுக்கு  வாரம் ஒருமுறை  பால் அபிஷேகம் செய்ய தானம் அளிக்க வேண்டும்.

மகரம்

பொது பலன்: இந்த  வாரம் உங்களுக்கு ஏராளமான பலன்கள் நடக்கும்.  நிரந்தரமான மன மகிழ்ச்சி சூழல் அமையும். திருமணமாகாத மகர ராசிக்காரருக்கு திருமண ப்ராப்த்தம் அமையும். தொழிலில் நிலுவிய பிரச்சனைகள் குறையும். 

குடும்பத்தில் நிம்மதியாக இருப்பீர்கள், உங்கள் மனநிலையை குடும்பத்தினர் புரிந்து கொள்வர். காதல் கைகூடும் யோகம் அதிகமாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் மனப் பொருத்தம் அதிகமாகும்.

கலை உலகத்தில் பணிபுரியும் மகர ராசிக்காரருக்கு இந்த வாரம் இருக்கும் நிலையிலிருந்து உச்சக்கட்ட புகழ் அடைவர். கல்வி நிலை நன்றாக உள்ளது. நிதி நிலையில் வரவு செலவும் சமமாக இருக்கும். ஆரோக்கியத்தில் திடீரென பிரச்சனைகள் வரும், முக்கியமாக உணவு முறையில் அக்கறை காட்ட வேண்டும்.

 உத்திராடம்: பிறரின் உதவியால் உங்களுக்கு அதிகமான நன்மைகள் நடக்கும்.

திருவோணம்: திருமண வயதினருக்கு திருமண பாக்கியம் உருவாகும்.

அவிட்டம்: மன உறுதியுடன் பல புதிய முயற்சிகளைத் தொழிலில் எடுப்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று அனுமன் கோவில் சென்று பால், நெய் தானமாக அளிக்க வேண்டும். 

கும்பம்

பொது பலன்: இந்த வாரம் உங்கள் தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, முக்கியமாக உற்பத்தி தொழில் நல்ல லாபம் அளிக்கும்.  உறவினர் வீட்டுக்கு செல்லுவீர்கள். நல்ல எண்ணங்கள் இருக்கும், உங்கள் செல்வ நிலை வளர்ச்சி சொல்லும்.  வசதி வாய்ப்பு பெருகும் யோகம் கும்ப ராசிக்காரருக்கு உள்ளது.  

மாணவர்களின் கல்வி அறிவு சற்று மந்தமாக இருக்கும். நலமான குடும்ப வாழ்க்கை இருக்கும், காதல் வாழ்க்கையில் அன்பான உரையாடல் அசைக்க முடியாத உறவை உருவாக்கும்.  ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவைப்படும்.

சதயம்: குழந்தைகளின் மூலம் மன நிம்மதி அடையும்.

அவிட்டம்: நீண்ட நாட்களாக உங்கள் தொழிலில் நிலைத்திருந்த பிரச்சனைகள் குறையும்.

பூரட்டாதி: ஆரீஒக்கியத்தில் சிறிய பிரச்சனை வந்தாலும் அது பெரியதாக பாதிக்காது. மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வம்

பரிகாரம்: குல தெய்வத்துக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எலுமிச்சம்பழம் மாலை அணிந்து வழிபட வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 28,29,30 

மீனம்

பொது பலன்: இந்த வாரம் ஆதாயம் கிடைக்கும் வாரமாக தோன்றும், வியாபாரம் அசுர வளர்ச்சி கொள்ளும். இந்த வாரம் உங்கள் நண்பர்களின் மூலம் பல நன்மைகள் நடக்கும். உங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்ட முன்னேற்றம் இருக்கும். நல்ல செல்வ நிலை இருக்கும்.

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இதுவரை உறவினர் மத்தியிலிருந்த மன வருத்தம் நீங்கி நல்ல உறவு மேம்படும்.  புதிய கல்வி கற்க ஊக்கத் தொகைக்காகக் காத்திருந்த மாணவர்கள் ஊக்கத் தொகை பெறும் வாய்ப்புள்ளது. 

பூரட்டாதி: நண்பர்களின் உதவி வாழ்வை மேம்படுத்தும்.

உத்திரட்டாதி: தொழிலில் அருமையான முன்னேற்றம் இருக்கும், பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

ரேவதி: தொழிலில் நல்ல மாற்றங்கள் அதிகமாக நிகழும்.  

வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி தேவி 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தினத்தில் வீட்டின் பூஜை அறையில் வடகிழக்கு திசையை நோக்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்