Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

July Month Rasipalan 2022: இந்த மாதம் ஆரோக்கிய குறையால் அவதிபட போகும் அந்த ராசிக்காரர் நீங்களா..!

Manoj Krishnamoorthi June 28, 2022 & 13:30 [IST]
July Month Rasipalan 2022: இந்த மாதம் ஆரோக்கிய குறையால் அவதிபட போகும் அந்த ராசிக்காரர் நீங்களா..!Representative Image.

Representative Image. மேஷம் முதல் கடகம் வரை முதல் 6 ராசியின் ஜூலை மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும் (July Month Rasipalan 2022).


சிம்மம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த மாதம் கலவையான பலன்கள் தான் கிடைக்கும், வாழ்க்கை ஏற்றத் தாழ்வாக இருக்கும். தொழில் இருக்கும் நிலை மனசோர்வை உருவாக்கும். உத்தியோகத்தில் மிதமான வளர்ச்சி தான் இருக்கும், வேலைகளில் கால தாமதம் அதிகமாக ஏற்படும். உயர் ஸ்தானத்திலிருந்த சிம்ம ராசிக்காரர் இருக்கும் இடத்திலிருந்து சரியும் வாய்ப்புள்ளது, சுய தொழில் செய்யும் சிம்ம ராசிக்காரர்கள் வருமானத்தை அதிகப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலையில் குறைந்த லாபமே கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும், குடும்பத்துடன் குறுகிய பயணம் மேற்கொள்ளப் போகிறீர்கள். கல்வி ஸ்தானத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும், உயர்கல்வி கற்க ஊக்கத் தொகைக் கிடைக்கும். உங்கள் உடல்நலம் ஓரளவு நன்றாக இருந்தாலும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். 

மகம்: கலவையான பலனே இருந்தாலும், குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை.

பூரம்: வெற்றிக்காக கடுமையாகப் போராடுவீர்கள், பொறுமை காக்க வேண்டும்..

உத்திரம்: தேவையை சமாளிக்கும் வகையில் நிதி நிலை கையில் இருக்கும்.

பரிகாரம்:பிரதோஷ தினத்தன்று சிவ ஆலயம் செல்ல வேண்டும். 

கன்னி

பொது பலன்: இந்த மாதம் உங்களுக்கு ஓரளவு சாதகமான பயன் அளிக்கும், முக்கியமாக 10 வது வீட்டில் சூரியன் மற்றும் புதன் இருப்பது தொழில் ஸ்தானத்தை நன்றாக வைக்கும். சுயதொழில் செய்யும் கன்னி ராசிக்காரருக்கு பழைய நண்பர்களின் மூலம் தொழில் விருத்தியாகும். கல்வி நிலையில் வெற்றி கடுமையான உழைப்புக்கு பிறகு தான் கிடைக்கும், சிறந்த பல்கலை கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். உங்கள் நிதி பார்வை ஓ

உங்கள் ராசியில் 2 ஆம் வீட்டில் கேது பகவான் இருப்பது குடும்பத்தில் பதட்டத்தை உருவாக்கும். கணவன் மனைவி உறவிலிருந்த இடைவெளி குறையும்  அவ்வப்போது சில பிரச்சனைகள் உதித்தாலும் பெரியளவில் குடும்பத்தின் ஆனந்ததைப் பாதிக்காது. முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் குடும்பத்தினரின் ஆலோசனையைப் பெறுவது தவறு நடக்காமல் தடுக்க உதவும்.  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், மருத்துவ செலவு வரும். சிலருக்கு அறுவை சிகிச்சை நடக்கும்.

உத்திரம்:  நண்பர்களின் மூலம் நிதி நிலை உயரும், தொழில் வாழ்க்கையில் கடினமான உழைப்பு தேவைப்படும்.

அஸ்தம்: தொழில் தடைகள் நீங்கும், கவனமாக செயல்பட்டால் லாபம் பெற முடியும்.  

சித்திரை: புதிய நபரின் சந்திப்பு இந்த மாதம் வியாபாரத்தில் மிகப்பெரிய பலமாக இருக்கும், ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் காட்ட வேண்டும்.

பரிகாரம்: உங்கள் கண் பார்வையில் தெரியும் நாய்க்கு பால் அல்லது உணவளியுங்கள், பைரவரின் அருள் கிடைக்கும்.

துலாம்

பொது பலன்:  உங்களுக்கு இந்த மாதம் மிகவும் நன்றாக உள்ளது தொழிலில் ராஜ யோகம் காணும் தருணமாக இருக்கும். செல்வ வரவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய முதலீடு இந்த மாதம் நல்ல லாபம் அளிக்கும் ஆனால் பணத்தை சேமிக்க முடியாது.

மாதத்தின் முதல் பாதியில் குடும்பத்தில் சில அசௌகரியமான சூழல் வந்தாலும், பிற்பகுதியில் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் வாழ்கையில் உங்கள் கோபம் ஊறவில் விரிசலை தரும். அறுவை சிகச்சை நடக்கும் சூழல் உருவாகும். நல்ல மதிப்பைப் பெறும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பொறுமையாக இருப்பது பொருள் சேதத்தை உருவாக்காது. உடல்நலத்தில் பிரச்சனை இல்லை.

சித்திரை: செலவுகளை கட்டுப்படுத்த முயலவும்.

சுவாதி: தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். ஓரளவு பணம் கையில் நிற்கும்.

விசாகம்: பொறுமையாக இருப்பது குடும்பத்தில் நிம்மதியை அளிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பச்சைப் பால் சேர்த்து குளிக்கவும். 

விருச்சிகம்

பொது பலன்:  உங்களுக்கு இந்த மாதம் முயற்சி செய்து முடிக்க முடியாத பிரச்சனைகளை முடிக்க பல உதவிக்கரம் கிடைக்கும். பல நாள் பிரச்சனை அல்லது நிலுவையிலிருந்த வழக்குகள் அனைத்திலும் கடுமையான போராட்டாத்திற்கு பிறகு தான் வெற்றி காண முடியும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முழுமூச்சுடன் வேலை செய்து பாராட்டு பெறுவீர்கள்.

ஏழாவது வீட்டில் சுக்கிரன் இருப்பது குடும்ப வாழ்க்கைக்கு நல்லதாகும். குடும்பத்தில் இதற்கு முன்னால் இருந்த பிரச்சனைகள் நீங்கி திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும், குழந்தை பேறு கிடைக்கும். செல்வ நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. கல்வி ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மன அழுத்தம் உடல்நலத்தை பாதிக்கக்கூடும் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவை.   

விசாகம்: இந்த மாதம் கிடைக்கும் அதிகமான பண வரவு, குடும்ப செலவுகள் பூர்த்தியாகும்.

கேட்டை: வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், வாடிக்கையாளரின் மதிப்பைப் பெறுவீர்கள்.

அனுஷம்: பல நாள் பகை முற்று பெறும், வெற்றி கொள்வீர்கள். 

பரிகாரம்: விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும், பசியுள்ள உயிரினங்களுக்கு உணவளிப்பதால் பல நாள் துன்பங்கள் நீங்கும்.


Representative Image. தனுசு- மீனம் அடுத்த 4 ராசியின் ஜூலை மாத ராசிபலன்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்