Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

July Month Rasi Palan 2022 in Tamil: இந்த ராசிக்காரருக்கு இந்த மாதம் வரும் பண வரவு மிகப்பெரிய உச்சத்தில் கொண்டுபோகும்.. ஆனால்  ஆரோக்கியம் தான்?

Manoj Krishnamoorthi June 28, 2022 & 18:00 [IST]
July Month Rasi Palan 2022 in Tamil: இந்த ராசிக்காரருக்கு இந்த மாதம் வரும் பண வரவு மிகப்பெரிய உச்சத்தில் கொண்டுபோகும்.. ஆனால்  ஆரோக்கியம் தான்?Representative Image.

Representative Image. July Month Rasi Palan 2022 in Tamil: சிம்மம் முதல் விருச்சிகம் மாத ராசிபலன்


தனுசு

பொது பலன்:  உங்கள்  ராசிக்கு இந்த வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், சிலருக்கு வீடு கிரக பிரவேசம் செய்யும் யோகம் உள்ளது. அரசியல்  மற்றும் கலை சம்பந்தப்பட்ட  தொழிலில் இருப்பவர்களிஉக்கு இந்த மாதம் மிகவும் அருமையாக உள்ளது.  10 ஆம் வீட்டில் புதன் இருப்பது தொழில் ரீதியாகப் பல நன்மைகளைத் தரும்.

மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் கல்வி கற்கும் ஆற்றல் நன்றாக உள்ளது. 3 வது வீட்டில் சனி பகவான் இருப்பது நல்ல பண வரவை தரும். குடும்ப சூழல் மிகவும் நன்றாக உள்ளது. குடும்பத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் முன்னேற்றம் கொள்ளும், நல்ல உடல்நலம் இருக்கும். 

மூலம்: தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

பூராடம்: சுப நிகழ்ச்சி நிகழும், எதிர்பாராத நல்ல தகவல் வரும்.

உத்திராடம்: கையில் கணமான பண வரவு இருக்கும்,  

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று மஞ்சள் கலந்த நீரில் குளிக்க வேண்டும்.

மகரம்

பொது பலன்: உங்கள் சிறந்த அறிவாற்றலுக்குப் பலனாக இந்த மாதம் மிகவும் நன்றாக உள்ளது,இதற்கு காரணம் உங்கள் ராசியில் 5 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதாகும். வியாபாரம் மிகவும் அருமையாக நடக்கும். நல்ல லாபம் பெற முடியும். 

குடும்பத்தில் இந்த மாதம் மகிழ்ச்சியான சூழல் அதிகமாக இருக்காது, ஆனால் அன்பு  இருக்கும். காதலர்களுள் நெருக்கம் அதிகரிக்கும், இனிமையான உரையாடல் இருக்கும். உங்கள் ராசியில் முக்கியமாக சூரிய புதன் சேர்க்கை நல்ல ஆரோக்கியத்தைத் தரும். 

உத்திராடம்: எதிர்பார்க்காத பல நன்மைகள் நடக்கும்.

திருவோணம்: சிறப்பான ஆரோக்கியம் உண்டு.

அவிட்டம்:  நல்ல பண வரவு உண்டு.

பரிகாரம்: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கோயிலுக்கு ஒப்பனை பொருட்கள் தானமாக அளிக்கலாம்.

கும்பம்

பொது பலன்: உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும்  இராகு சேர்க்கை 3 ஆம் வீட்டில் இருப்பது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக மாற்றுவீர்கள். கொடுத்த பணம் திரும்பி வரும். நிறுத்தி வைத்த செயல் மீண்டும் தொடங்க மிடியும் அதில் வெற்றியும் உண்டு. தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. நிதி நிலை அருமையாக உள்ளது.

வீட்டில் அனைவரின் மனதையும் சந்தோஷப்படுத்துவீர்கள், இரத்த சந்தோஷத்துடன் சிறிய சண்டைகள் வரும். 2 ஆம் வீட்டில் குரு இருப்பதால் உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகமாகும். ஆறாவது வீட்டில் செவ்வாய் மற்றும் குருவின் முழு பார்வை இருப்பது பல ஆரோக்கியக் குறையைச் சரி செய்யும்.

சதயம்: நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அவிட்டம்: விடா முயற்சி அதிகம் இருக்கும், உறுதியான மனநிலை தேவைப்படும்.

பூரட்டாதி:  வீட்டிலிருந்த சிக்கலை சரி செய்வீர்கள், கணமான பண வரவு வீட்டின் பண தேவையைப் பூர்த்தி செய்யும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

மீனம்

பொது பலன்: பல நாட்களாக முயற்சி செய்து சலிப்படைந்த உங்களுக்கு இந்த மாதம் வெற்றியைக் கொடுக்கும். உங்களின் புதிய திட்டங்கள் பல வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அளிக்கும்.  மாணவர்களின் கல்வி நிலை நன்றாக உள்ளது, படிப்புக்காக வெளிநாடு செல்லுவீர்கள். 

குடும்ப வாழ்க்கை சாதரணமாக இருக்கும், புதிய நட்பு அமையும். உணர்ச்சிவசமான பேச்சு குடும்பத்தில் சில மன வருத்தமான சூழலைத் தரும். சனியின் பார்வை ஆறாம் வீட்டில் இருப்பதால் ஆரோஈஅ குறை ஏற்படும்.

பூரட்டாதி: பல தடைகள் தீர்ந்து, நிம்மதியான மனநிலை கிடைக்கும்.

உத்திரட்டாதி: மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

ரேவதி: பலமான நட்பு கிடைக்கும், பேச்சால் சில பிரச்சனை வீட்டில் உருவாகும்.

பரிகாரம்: திருமால் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வெண்ணிற ஆடையை தானமாகக் கொடுக்க வேண்டும். 


Representative Image. மேஷம்- கடகம் வரை முதல் 4 ராசியில் ஜுலை மாத ராசிபலன். 


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்