Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,202.19
-98.95sensex(-0.13%)
நிஃப்டி23,507.75
-50.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

June Month Rasi Palan: குழப்பமான மன நிலையில் இருக்கும் அந்த ராசிக்காரர்  நீங்களா....! ஜீன் மாத ராசிபலன் 2022

Manoj Krishnamoorthi May 30, 2022 & 20:00 [IST]
June Month Rasi Palan: குழப்பமான மன நிலையில் இருக்கும் அந்த ராசிக்காரர்  நீங்களா....! ஜீன் மாத ராசிபலன் 2022Representative Image.

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மாறுதல் சாமானியமே அந்த வகையில்  இந்த மாதம் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் சுக்கிரன், ரிஷபத்தில் சூரியன், ம்கரத்தில் சந்திரன் எனக் கிரகங்கள் நிலை கொண்டு இருப்பது ஜீன் 5ஆம் தேதி சனி பகவான் வக்கிர பெயர்ச்சி கும்பத்தில் இருப்பது போன்ற கிரக நிலை மாற்றத்தால் முதல் 3 ராசிகள் (மேஷம்- மிதுனம்) அடையும் பலன் பற்றி அறிய இவ்வாசகத்தைத் தொடர்ந்து படிக்கவும். 

மேஷம்

பொது பலன்: இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வீர்கள். செல்வ நிலையில் நல்ல லாபம் இருக்கும். கல்வி நிலை நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகமாகும். திருமண வாழ்க்கையில் அனுசரித்து செல்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 

அஸ்வினி:  குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆனந்தம் அளிக்கும். 

பரணி: உடல் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

கிருத்திகை: குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்வது நன்மை அளிக்கும். 

ரிஷபம்

பொது பலன்: அனுபவங்களே சிறந்த பாடம் என்பதை உணர்ந்து வாழ்வின் நிகழ்வுகளை அனைத்தையும் சிறந்த பாடமாகப் பார்க்கும் உங்களுக்கு இந்த மாதம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற அதிகமாக கஷ்டப்பட வேண்டியிருக்கும், எனவே யாரிடமும் வாக்கு கொடுக்க வேண்டும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனையைச் சரி செய்ய முடியாது, பொறுமையாக இருக்க வேண்டும். தொழில் ஸ்தானம் ஓரளவு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில வாக்குவாதங்கள் வரும். நிதி நிலையில்  பிரச்சனை இல்லை. 

கிருத்திகை: வழக்கைத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும் 

மிருக ஸீரிஷம்: மனதில் எதிர்மறை எண்ணங்கள் பலத் தோன்றும்.

ரோகிணி: தொழிலில் எடுக்கும் முயற்சி வெற்றி அளிக்கும்.

பரிகாரம்: வாரந்தோறும் லட்சுமி தேவியை மனதில் நினைத்து வெள்ளிக்கிழமை காலையில் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 15, 16

மிதுனம்

பொது பலன்: உங்கள் விடாமுயற்சியின் மூலம் இந்த மாதம் பல நற்பலன்கள் கிடைக்கும், இந்த மாதம் பழைய நண்பர்களைச் சந்திக்கும் சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கோளாறு ஏற்படும்.  உங்களுக்கு மனக் குழப்பங்கள் பலத் தோன்றும். பண வரவு இருந்தாலும் திடீரென சில செலவுகள் வரும் எனவே அதற்கு தகுந்தவாறு தயாராக இருங்கள். தொழிலில் சில போட்டிகள் இருக்கும், மனம் தளராமல் முயற்சி செய்வது தொழிலைச் சமாளிக்கும். குடும்பத்தில் சிறிய வேற்றுமை உருவாகும். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை.

மிருகசீரிஷம்: மன குழப்பமாக இருக்கும், பிறரை நம்புவதில் அதீத குழப்பம் இருக்கும்.

திருவாதிரை:  குடும்ப பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்.

புனர் பூசம்: பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில் சென்று தீபம் ஏற்றி  துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்தல் நன்மை பகுக்கும். 

சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்