Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகு கேது பெயர்ச்சி 2023.. யாருக்கு விடியல் விமோசனம் வரும்? | Rahu Ketu Peyarchi 2023 Palangal in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ராகு கேது பெயர்ச்சி 2023.. யாருக்கு விடியல் விமோசனம் வரும்? | Rahu Ketu Peyarchi 2023 Palangal in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி 12 ராசியினருக்கும் எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி 2023 பலன்கள்:

மேஷம்: இந்த ஆண்டு நடக்க உள்ள ராகு – கேது பெயர்ச்சியினால், மேஷ ராசிக்காரர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகலாம். மனதிற்குப் பிடித்தவர்களால் மனவருத்தங்கள் உண்டாகலாம். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பதற்கான திறமையும், வாய்ப்பும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்குவதுடன், ஒற்றுமை பிறக்கும். மேலும் படிக்க..

ரிஷபம்: நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு, செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பானை நீங்கும். மனதில் நினைத்ததை செய்து முடிக்கும் தன்னம்பிக்கை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கேளிக்கை சம்மந்தமான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் படிக்க..

மிதுனம்: ராகு கேது பெயர்ச்சியின் மூலம் செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் குறையும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் படிக்க..

கடகம்: கடக ராசிக்காரர்கள் எதிலும் எளிமையான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சில தவறுகள் மூலம் புதிய பரிணாமத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மேலும் படிக்க..

சிம்மம்: செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகள் குறையும். பொருள் வரவு, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பிறமொழி பேசும் பிரபலமானவர்கள், உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பிடித்த வீடு, வாகனத்தை மாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தெளிவான தீர்வினை தெரிந்துகொள்வீர்கள். மேலும் படிக்க..

கன்னி: கன்னி ராசி நேயர்களுக்கு முன் கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  முக்கியமான முடிவுகளை சிந்தித்து எடுக்கவும். வேகம் என்பதை விட விவேகம் மிகவும் அவசியம் தேவை. மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். மேலும் படிக்க..

துலாம்: துலாம் ராசி நேயர்களே முன் கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதிரியத்தால் பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.  சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்படும் சிறு சிறு சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். மேலும் படிக்க..

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, அதிக புத்தி கூர்மையும் சமூகப்பற்றும் கொண்டவர்களாக இருப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். கடந்த காலங்களில் குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து. நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்து ஏற்றம் அடைவீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும் படிக்க..

தனுசு: தனுசு ராசி சுயநலமின்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்கள். இருந்தாலும் இனி எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தற்போது இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மேலும் படிக்க..

மகரம்: மகர ராசி நேயர்களே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடுகள் எடுப்பது உத்தமம். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது. மேலும் படிக்க..

கும்பம்: கும்ப ராசி சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல் மன அழுத்தம் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும். அன்றாட செயல்களில் திறம்பட செயல்படுவீர்கள். மேலும் படிக்க..

மீனம்: எப்போதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை கவரக்கூடியவர்கள் மீனம் ராசியினர். நீங்க வரும் நாட்களில் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பதும், சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். மேலும் படிக்க..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்