Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kumbam Sani Peyarchi 2022: கும்பத்துக்கு சனி பெயர்ச்சியால் பெரும் அதிர்ஷ்டம் இனி இருக்கும் இடமே வேற தான்...! 

Manoj Krishnamoorthi May 28, 2022 & 11:10 [IST]
Kumbam Sani Peyarchi 2022: கும்பத்துக்கு சனி பெயர்ச்சியால் பெரும் அதிர்ஷ்டம் இனி இருக்கும் இடமே வேற தான்...! Representative Image.

சனி பகவனின் பார்வையால் நம் கர்ம வினைப்பயன்கள்  அடைந்து நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல செய்வதுதான்  சனி பெயர்ச்சி ஆகும். சனி பகவான் நம் கர்ம வினைப் பயனுக்கு தகுந்தவாறு பலன் அளிக்கும் காலமே சனி பெயர்ச்சி ஆகும், இந்த வருடம் 29 ஏப்ரல் 2022 அன்று நிகழ்ந்த சனி பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு கிடைக்கும் பலன் பற்றி அறிய வேண்டுமா? கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி யோகமா! இல்லை சாபமா! உள்ளதா (Kumbam Sani Peyarchi 2022) என்பதை அறிய மேலும் பின்தொடர்ந்து படியுங்கள். 

கும்ப ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள் ( Kumbha Rasi Sani Peyarchi 2020 to 2023,)

பொது பலன்

எந்த சூழ்நிலையிலும் நிதானத்தைத் தவறாத கும்ப ராசிக்காரரே இந்த வருடம் 29.04.2022 அன்று நிகழ்ந்த சனி பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு சனி பகவான் 1 ஆம் வீட்டில் குடியேறியுள்ளார். இது தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உங்களின் மதிப்பும் மரியாதையும் தற்போது இருப்பதைவிட அதிகமாகும், உறவினர் மத்தியில் உங்கள் மரியாதை கூடும். செல்வ நிலை அமோக இருக்கும். 12.07.2022 பின் தற்போது இருக்கும் நிலை சற்று வேகம் குறைந்தாலும் இருக்கும் நிலையிலிருந்து இறங்கமாட்டீர்கள், இயல்பான வளர்ச்சி இருந்து கொண்டியிருக்கும். 


கன்னி ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.  


குடும்ப வாழ்க்கை

குடும்பத்தின் அதிகமான பாசம் கொண்ட உங்களுக்கு சனி பெயர்ச்சி இயல்பான நிலையே தரும். காதல் வாழ்க்கையில்  சில ஏற்ற தாழ்வுகள் வரும் எனவே காதல் உறவில் கவனமாக இருக்க வேண்டும். திருமண பந்தத்தில் பொறுமை வேண்டும். திருமணமாகாத கும்ப ராசியினருக்கு திருமண பந்தம் உருவாகும். பெற்றோருடன் ஆனந்தமாக இருப்பீர்கள்.

தொழில்

தொழிலில் மிதமான  வளர்ச்சி இருக்கும், தற்போது நிலைத்திருக்கும் நிலையிலிருந்து நிச்சயமாக உங்கள் நிலை உயரம். உங்கள் பணியிடத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அங்கீகாரம் அளிக்கும்.

கல்வி

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. புதியதாகக் கல்லூரி செல்ல நினைப்பவர்களுக்கு பெரிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, ஆனால் அதை நனவாக்கக் கடினமான உழைப்பு தேவைப்படும். 

உடல்நலம்

உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும், பெரிய அளவு பாதிப்பு இல்லையென்றாலும் மூட்டுகளில் வலி அல்லது சிறிய தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். முறையில்லாத உணவு பழக்கத்தால் கல்லீரல் பிரச்சனைகளும் தோன்றும்.  

பரிகாரம்

  • அமாவாசை தினத்தில் உளுந்து பருப்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
  • சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு முன் நீல நிற ஆடை வைத்து பூஜித்து, அதை உடுத்திக் கொள்ள வேண்டும்.

மீன  ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஆன்மிகம் மற்றும் ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்