Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சனி வக்கிரநிலையால் ரிஷப ராசியினருக்கு வரப்போகும் ஆபத்து.. | June Month Rasi Palan 2023 Rishabam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சனி வக்கிரநிலையால் ரிஷப ராசியினருக்கு வரப்போகும் ஆபத்து.. | June Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

உங்க லக்னத்தில் கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் அமர்ந்திருப்பதால், வெற்றி மேல் வெற்றி வந்து தேடி தரும். பெண்களுக்கு ஆளுமை திறம் அதிகரிக்கும். நினைத்தது கைகூடும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் உத்வேகம் பிறக்கும். எப்போதும் கோபமாக நடந்துக்கொண்டிருந்த ரிஷப ராசியினர் கோபத்தை கைவிட்டு அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். பணவருவாயில் தேக்கநிலைகள் அகலும். 

இருப்பினும், ஜூன் 18 ஆம் தேதிக்கு பிறகு இளைய சகோதரரிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் பயங்கரமான போராட்டம் வரும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். குறிப்பாக, குடும்பத்தில் பெரியவர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களே துரோகியாக கூடிய காலம் என்பதால், எக்காரணத்திற்காகவும் ரகசியத்தை அவர்களிடம் சொல்ல வேண்டாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்