Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இழிவு படுத்தியவர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள்..!| Kadagam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
இழிவு படுத்தியவர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள்..!| Kadagam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 139 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் கடக ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

இழிவு படுத்தியவர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள்..!| Kadagam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 கடகம்:

சனி பகவான் பெயர்ச்சியாவது கடக ராசிக்கு சாதகமாக அமையும். மற்றவர்களிடம் பேசும் போது தெளிவாக பேசுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த நிலையற்ற தண்மை படிப்படியாக மாறும். கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பு அமையும். குடும்பத்தின் நன்மைக்காக சில விஷயங்களை கையாள்வீர்கள். சுப காரியங்கள் நடைபெறலாம், அதனால் செலவுகள் இருக்கும். புது வீடு கட்டும் அமைப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியடைவீர்கள்.

எந்த செயலாக இருந்தாலும் ஆழ்ந்து யோசித்து செயல்படுவீர்கள். காதலில் இருந்த பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். எடுத்த விஷயத்தை செய்து முடிக்கும் தீர்மானத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்கு சார்ந்த விஷயத்தில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்ப பெரும் வாய்ப்புள்ளது. புதிய தொழில் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்