Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுய சிந்தனையால் மற்றவர்களை வியக்க வைப்பீர்கள் | Mithunam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
சுய சிந்தனையால் மற்றவர்களை வியக்க வைப்பீர்கள் | Mithunam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 139 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் மிதுன ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சுய சிந்தனையால் மற்றவர்களை வியக்க வைப்பீர்கள் | Mithunam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 மிதுனம்:

சனி பகவானின் இந்த வக்கிர நிலை சஞ்சாரம் மிதுன ராசிக்கு நல்ல ஏற்றத்தை தரும் வாய்ப்புள்ளது. இளைய சகோதரர்களிடத்தில் தேவையற்ற வாக்குவாதத்தால் அசாதரணமான சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆகவே, அவர்களிடத்தில் சற்று விட்டு கொடுத்து போவது நல்லது. என்ன செய்தாலும் மந்தத்தன்மையாக இருப்பது போல் தோன்றும். எது செய்தாலும் அதில் புரிதலுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனை சரி செய்ய செலவு செய்யும் வாய்ப்புள்ளது. இதுவரை உங்களுக்கு தடை ஏற்படுத்திய மறைமுக எதிரிகளிடத்தில் இருந்து மீண்டு வருவீர்கள்.

கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புள்ளது. தேவைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னர் யோசித்து செயல்பட வேண்டும். மற்றவர்களிடத்தில் தந்து ஏமாற வேண்டாம். தந்தையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிர்பாராத முன்னேற்றம் அமையும். மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆசைகளை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்வீர்கள். சில தடைகள் ஏற்பட்டாலும் திருமணம் சார்ந்த விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்கும். புது வீடு, மனை, வண்டி உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும் அமையும் உள்ளது. இதுவரை இருந்த பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக வெளியே வர போறீர்கள். மற்றவர்களின் பிடியில் இருந்து மீண்டு வந்து, உங்களின் சுய சிந்தனையில் செயல்களை செய்ய போறீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்